டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் சென்ற இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. டி20 தொடரை 1-1 என்று சமன் செய்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்தது.
இதில், செஞ்சூரியனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் மற்றும் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. தென் ஆப்பிரிக்கா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட கைப்பற்றாத நிலையில், இந்த முறை கண்டிப்பான முறையில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாடிய இந்திய அணிக்கு இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சியது.
சொதப்பி தள்ளிய இந்திய மகளிர் அணி – ஆஸிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
முதல் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில், இனி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வாய்ப்பில்லாத நிலையில், தொடரை சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி 2ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடியது. கேப்டவுனில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி வரலாற்று வெற்றி பெற்றது. இதுவரையில் கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றதில்லை.
இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி தொடங்கிய கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலமாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது. இந்த நிலையில் தான் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை வரிசை பட்டியலை ஐசிசி நேற்று வெளியிட்டது.
மகன் அர்ஜூனா விருது பெறுவதை பார்த்து ரசித்த முகமது ஷமியின் தாய் – வைரலாகும் வீடியோ!
இதில், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசைப் பட்டியலில் விராட் கோலி 3 இடங்கள் முன்னேறி 6ஆவது இடம் பிடித்துள்ளார். இதே போன்று ரோகித் சர்மா 4 இடங்கள் முன்னேறி 10ஆவது இடம் பிடித்துள்ளார். மேலும், ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 3ஆவது இடத்திலும், ரோகித் சர்மா 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.