இந்திய மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைத் தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டிகளில் முறையே இரு அணிகளும் 1-1 என்று கைப்பற்றி சமனில் இருந்தன. இந்த நிலையில் தான் தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று மும்பையில் நடந்தது.
சொதப்பி தள்ளிய இந்திய மகளிர் அணி – ஆஸிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு: தொடரை கைப்பற்றுமா இந்தியா?
இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில், ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஷஃபாலி வர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களில் வெளியேறினார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். தீப்தி சர்மா 14 ரன்களில் வெளியேற, ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார். கடைசியாக அமன்ஜோத் கவுர் 17 ரன்களும், பூஜா வஸ்த்ரேகர் 7 ரன்களும் எடுக்கவே இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.
மகன் அர்ஜூனா விருது பெறுவதை பார்த்து ரசித்த முகமது ஷமியின் தாய் – வைரலாகும் வீடியோ!
பின்னர் எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு கேப்டன் அலீசா ஹீலி மற்றும் பெத் மூனி இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டிற்கு இந்த ஜோடி 85 ரன்கள் குவித்தது. இதில் அலீசா ஹீலி 38 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தஹிலா மெக்ராத் 20 ரன்களில் வெளியேற, எல்லீஸ் பெர்ரி ரன் ஏதும் இல்லாமல் நடையை கட்டினார். கடைசி வரை விளையாடிய பெத் மூனி தன் பங்கிற்கு அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா மகளிர் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்று கைப்பற்றியது. இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை 3-0 என்று கைப்பற்றிய நிலையில், தற்போது டி20 தொடரையும் 2-1 என்று கைப்பற்றி ஆஸ்திரேலியா மகளிர் அணி சாதனை படைத்துள்ளது.