சொதப்பி தள்ளிய இந்திய மகளிர் அணி – ஆஸிக்கு 148 ரன்கள் வெற்றி இலக்கு: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

By Rsiva kumar  |  First Published Jan 9, 2024, 8:53 PM IST

ஆஸ்திரேலியா மகளிர் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைத் தொடர்ந்து தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடந்து முடிந்த முதல் 2 டி20 போட்டிகளில் முறையே இரு அணிகளும் 1-1 என்று கைப்பற்றி சமனில் உள்ளன. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது மும்பையில் நடந்து வருகிறது.

மகன் அர்ஜூனா விருது பெறுவதை பார்த்து ரசித்த முகமது ஷமியின் தாய் – வைரலாகும் வீடியோ!

Tap to resize

Latest Videos

இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா மகளிர் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய மகளிர் அணி பேட்டிங் செய்தது. இதில், ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஷஃபாலி வர்மா 26 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 2 ரன்களில் வெளியேறினார்.

கடவுள் எனது மிகப்பெரிய ஆசிர்வாதம், வாய்ப்பை கொடுத்தவர்: ராம் சியா ராம் பின்னணி ரகசியம் – கேசவ் மகாராஜ்!

கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பெரிதாக சோபிக்கவில்லை. அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் 8 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்திருந்த இந்திய மகளிர் அணி அடுத்து 30 ரன்கள் அடிப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிதானமாக விளையாடி வந்த ஸ்மிருதி மந்தனா 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Hardik Pandya: நானும் ரெடின்னு சொல்லாமல் செய்து காட்டும் ஹர்திக் பாண்டியா - வைரலாகும் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ!

இதையடுத்து ரிச்சா கோஷ் மற்றும் தீப்தி சர்மா இருவரும் இணைந்து ஓரளவு ரன்கள் சேர்த்தனர். தீப்தி சர்மா 14 ரன்களில் வெளியேற, ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார். கடைசியாக அமன்ஜோத் கவுர் 17 ரன்களும், பூஜா வஸ்த்ரேகர் 7 ரன்களும் எடுக்கவே இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

National Sports Awards 2023: அர்ஜூனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!

click me!