உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 6 சதங்கள் அடித்து நம்பர் 1 இடத்தில் உள்ளார்.
இந்தியா 1975 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதுவரையில் 12 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்துள்ளது. இதில், 1983 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றியது. ஆனால், ஆஸ்திரேலியா மட்டுமே (1987, 1999, 2003, 2007, 2015) 5 முறை சாம்பியனாகியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 2 (1975, 1979) முறையும், பாகிஸ்தான் (1992), இலங்கை (1996) மற்றும் இங்கிலாந்து (2019) ஆகிய அணிகள் தலா ஒரு முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன.
ICC World Cup 2023: உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய 89 போட்டிகளில் எத்தனை வெற்றி?
இதுவரையில் இந்தியா உலகக் கோப்பையில் 83 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 53 போட்டிகளில் வெற்றியும், 33 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது. மேலும், 3 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர் 45 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில், 6 சதம், 15 அரைசதங்கள் உள்பட மொத்தமாக 2278 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆனால், இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா 2 முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிலேயும், 17 போட்டிகளில் விளையாடி 6 முறை சதம் அடித்துள்ளார். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மட்டுமே 5 முறை சதம் விளாசியுள்ளார்.
World Cup 2023: உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு செல்ல எத்தனை போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்?
இலங்கை அணியின் முன்னாள் குமார் சங்ககாரா 37 போட்டிகளில் 35 இன்னிங்ஸில் விளையாடி 5 முறை சதம் அடித்துள்ளார். இதே போன்று ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் 46 போட்டிகளில் 42 இன்னிங்ஸ் விளையாடி 5 சதம் அடித்துள்ளார். டேவிட் வார்னர் 18 போட்டிகளில் 4 சதங்கள் அடித்துள்ளார்.
சவுரவ் கங்குலி – 21 போட்டிகள் – 4 சதங்கள்
எபி டிவிலியர்ஸ் – 23 போட்டிகள் – 4 சதங்கள்
மார்க் வாக் – 22 போட்டிகள் – 4 சதங்கள்
திலகரத்னே தில்ஷன் – 27 போட்டிகள் – 4 சதங்கள்
மகிலா ஜெயவர்தனே – 40 போட்டிகள் – 34 இன்னிங்ஸ் – 4 சதங்கள்
விராட் கோலி 2011, 2015 மற்றும் 20219ஆம் ஆண்டுகளில் நடந்த உலகக் கோப்பை தொடர்களில் 26 போட்டிகளில் விளையாடி 1030 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில், அதிகபட்சமாக 107 ரன்கள் எடுத்திருக்கிறார். 2 முறை சதமும், 6 முறை அரைசதமும் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?
உலகக் கோப்பை சாதனைகள்: 89 போட்டிகள் (53ல் வெற்றி, 33ல் தோல்வி, 3 ரிசல்ட் இல்லை)
இந்திய அணியின் சாதனைகள் (உலகக் கோப்பை)
அதிகபட்ச ஸ்கோர் 413/5 vs பெர்முடா, போர்ட் ஆஃப் ஸ்பெயின் (2007)
குறைந்தபட்ச ஸ்கோர் 125 vs ஆஸ்திரேலியா, செஞ்சூரியன் (2003)
தனிநபர் சாதனைகள் (உலகக் கோப்பை)
அதிக ரன்கள்:
சச்சின் டெண்டுல்கர் (45 போட்டிகள் – 6 சதம், 15 அரைசதம் உள்பட 2278 ரன்கள்)
விராட் கோலி – (26 போட்டிகள் – 1030 ரன்கள்)
சவுரவ் கங்குலி – 21 போட்டிகள் 1006 ரன்கள்
கிரிக்கெட் வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் – சவுரவ் கங்குலி (183 ரன்கள் vs இலங்கை, 1999)
அதிக விக்கெட்டுகள்:
ஜாகீர் கான் – 23 போட்டிகள் 44 விக்கெட்டுகள்
ஜவஹல் ஸ்ரீநாத் – 33 போட்டிகள் 44 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே – 18 போட்டிகள் 31 விக்கெட்டுகள்
சிறந்த பந்து வீச்சு – ஆஷிஸ் நெஹ்ரா (6/23 vs இங்கிலாந்து, 2003)
அதிக கேட்சுகள் – அனில் கும்ப்ளே மற்றும் விராட் கோலி (14 கேட்சுகள்)
இந்திய அணி விளையாடும் போட்டிகள்:
அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா – சென்னை
அக்டோபர் 11 இந்தியா vs ஆப்கானிஸ்தான் – டெல்லி
அக்டோபர் 14 இந்தியா vs பாகிஸ்தான் – அகமதாபாத்
அக்டோபர் 19 இந்தியா vs வங்கதேசம் - புனே
அக்டோபர் 22 இந்தியா vs நியூசிலாந்து - தர்மசாலா
அக்டோபர் 29 இந்தியா vs இங்கிலாந்து - லக்னோ
நவம்பர் 02 இந்தியா vs இலங்கை - மும்பை
நவம்பர் 05 இந்தியா vs தென் ஆப்பிரிக்கா – கொல்கத்தா
நவம்பர் 12 இந்தியா vs நெதர்லாந்து - பெங்களூரு
1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 1 வெண்கலம்; குண்டு எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்!
உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்