ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்தியா இதுவரையில் 89 போட்டிகளில் விளையாடி அதில், 53ல் வெற்றியும், 33ல் தோல்வியும் அடைந்துள்ளது.
கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு 4 ஆண்டுகளுக்கும் ஒரு முறையில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், கபில் தேவ் தலைமையிலான இந்தியா அணி முதல் முறையாக 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து 28 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.எஸ்.தோனி தலைமையிலான இந்திய அணி 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை கைப்பற்றியது.
அதன் பிறகு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றவில்லை. தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையில் இந்தியா உலகக் கோப்பையில் 89 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், அதிகபட்சமாக 53 போட்டிகளில் வெற்றி கண்டுள்ளது. மேலும், 33 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. அதோடு, 3 போட்டிகளுக்கு முடிவு எட்டப்படவில்லை.
ஆண்டு வாரியாக இந்தியாவின் பட்டியல்
1975 – குரூப் ஸ்டேஜ் (5ஆவது இடம்)
1979- குரூப் ஸ்டேஜ் (7ஆவது இடம்)
1983 – இந்தியா சாம்பியன் (கபில் தேவ் கேப்டன்)
1987 – அரையிறுதிப் போட்டி
1992 – ரவுண்ட் ராபின் ஸ்டேஜ் (7ஆவது இடம்)
1996 – அரையிறுதிப் போட்டி
1999 – சூப்பர் சிக்ஸ் (6ஆவது இடம்)
2003 – ரன்னர்
2007 – குரூப் ஸ்டேஜ் (9 ஆவது இடம்)
2011 – சாம்பியன்ஸ் (தோனி கேப்டன்)
2015 – அரையிறுதிப் போட்டி
2019 – அரையிறுதிப் போட்டி
2023 – இன்னும் விளையாடவில்லை - ரோகித் சர்மா கேப்டன்
உலகக் கோப்பை சாதனைகள்: 89 போட்டிகள் (53ல் வெற்றி, 33ல் தோல்வி, 3 ரிசல்ட் இல்லை)
இந்திய அணியின் சாதனைகள் (உலகக் கோப்பை)
அதிகபட்ச ஸ்கோர்: 413/5 vs பெர்முடா, போர்ட் ஆஃப் ஸ்பெயின் (2007)
குறைந்தபட்ச ஸ்கோர்: 125 vs ஆஸ்திரேலியா, செஞ்சூரியன் (2003)
தனிநபர் சாதனைகள் (உலகக் கோப்பை)
அதிக ரன்கள்:
சச்சின் டெண்டுல்கர் (45 போட்டிகள் – 6 சதம், 15 அரைசதம் உள்பட 2278 ரன்கள்)
விராட் கோலி – (26 போட்டிகள் – 1030 ரன்கள்)
சவுரவ் கங்குலி – 21 போட்டிகள் 1006 ரன்கள்
கிரிக்கெட் வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் – சவுரவ் கங்குலி (183 ரன்கள் vs இலங்கை, 1999)
அதிக விக்கெட்டுகள்:
ஜாகீர் கான் – 23 போட்டிகள் 44 விக்கெட்டுகள்
ஜவஹல் ஸ்ரீநாத் – 33 போட்டிகள் 44 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே – 18 போட்டிகள் 31 விக்கெட்டுகள்
சிறந்த பந்து வீச்சு – ஆஷிஸ் நெஹ்ரா (6/23 vs இங்கிலாந்து, 2003)
அதிக கேட்சுகள் – அனில் கும்ப்ளே மற்றும் விராட் கோலி (14 கேட்சுகள்)
World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?
இந்திய அணி விளையாடும் போட்டிகள்:
அக்டோபர் 8: இந்தியா vs ஆஸ்திரேலியா – சென்னை
அக்டோபர் 11 இந்தியா vs ஆப்கானிஸ்தான் – டெல்லி
அக்டோபர் 14 இந்தியா vs பாகிஸ்தான் – அகமதாபாத்
அக்டோபர் 19 இந்தியா vs வங்கதேசம் - புனே
அக்டோபர் 22 இந்தியா vs நியூசிலாந்து - தர்மசாலா
அக்டோபர் 29 இந்தியா vs இங்கிலாந்து - லக்னோ
நவம்பர் 02 இந்தியா vs இலங்கை - மும்பை
நவம்பர் 05 இந்தியா vs தென் ஆப்பிரிக்கா – கொல்கத்தா
நவம்பர் 12 இந்தியா vs நெதர்லாந்து - பெங்களூரு
உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ரவிச்சந்திரன் அஸ்வின், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ்