ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 9ஆவது லீக் போட்டியின் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் டெல்லி அணிக்காக தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடம் பிடித்துள்ளது.
இதுவரையில் ஐபிஎல் தொடரில் 8 போட்டிகள் முடிந்துள்ளது. இந்த 8 போட்டியிலுமே ஹோம் மைதான அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. தற்போது 9ஆவது லீக் போட்டி நடைபெறுகிறது. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பவுலிங் தேர்வு செய்தார். இது ரிஷப் பண்ட்டின் 100ஆவது ஐபிஎல் போட்டியாகும். டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக பண்ட் டெல்லி அணிக்காக தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி வருகிறார்.
ஒரே ஓவரில் டர்னிங் பாய்ண்டான போட்டி – மைதானத்தையே அலற வைத்த ரியான் பராக்கின் வான வேடிக்கை ஷாட்!
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் பண்ட் ஒரு விக்கெட் கீப்பராக இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் கேட்ச் பிடித்தார்.
பின்னர் 186 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்து வருகிறது. இதில், டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். மார்ஷ் 12 பந்துகளில் 5 பவுண்டரி உள்பட 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரிக்கி பூய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய வார்னர் 34 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 49 ரன்களில் ஆவேஷ் கான் பந்தில் சந்தீப் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசியில் டெல்லி அணிக்காக தனது 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் பண்ட் 26 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் உள்பட் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். டெல்லி அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.
டெலி கேபிடல்ஸ் அணிக்காக அதிக ஐபிஎல் போட்டியில் விளையாடியவர்கள்:
100 – ரிஷப் பண்ட்
99 – அமித் மிஸ்ரா
87 – ஷ்ரேயாஸ் ஐயர்
82 – டேவிட் வார்னர்
79 – வீரேந்தர் சேவாக்
முதல் முறையாக ஒரு அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் விளையாடியவர்கள்:
CSK – சுரேஷ் ரெய்னா
MI – ஹர்பஜன் சிங்
RCB – விராட் கோலி
KKR – கவுதம் காம்பீர்
RR – அஜின்க்யா ரஹானே
SRH – புவனேஷ்வர்குமார்
DC – ரிஷப் பண்ட்**
இதுவரையில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஒரு வீரர் கூட 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.