இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும் இந்திய அணியை பெங்களூரு கிரிக்கெட் அகாடமிக்கு சென்று ரிஷப் பண்ட் சந்தித்து பேசியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நாளை 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் பாகிஸ்தான் மற்ற்ம் இலங்கையில் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள் என்று 6 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன. முதல் போட்டியில் நேபாள் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்தப் போட்டியானது முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
Asia Cup 2023: கேஎல் ராகுல் இல்லாமல் இலங்கை புறப்படும் ரோகித் சர்மா அண்ட் கோ!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது செப்டம்பர் 2 ஆம் தேதி இலங்கையில் நடக்கிறது. கடந்த 23 ஆம் தேதி முதல் இந்திய அணி வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். மேலும் வீரர்களுக்கு யோ யோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் காயம் காரணமாக இடம் பெறாத ரிஷப் பண்ட் அகாடமியில் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் இன்று இலங்கைக்கு புறப்பட்டுச் செல்லும் நிலையில், நேற்று அவர்களை சந்தித்து சிறிது நேரம் அவர்களுடன் கலந்து பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
Virat Kohli New Hairstyle: ஆசிய கோப்பைக்கு முன்னதாக புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!
ஆசிய கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து தான் உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இதில் ரிஷப் பண்ட் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இன்று இலங்கை செல்லும் இந்திய அணியில் கேஎல் இடம் பெற மாட்டார் என்று தெரிகிறது. இன்னும் ஓரிரு நாட்களுக்குப் பிறகு தான் கேஎல் ராகுல் இலங்கை புறப்பட்டுச் செல்ல உள்ளார். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெறவில்லை என்று பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கார் கூறியுள்ள்ளார். மேலும், அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று கூறியுள்ளார். தொடர்ந்து இந்தியா மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் கேஎல் ராகுல் இடம் பெற்று விளையாடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
Asia Cup 2023: ஆசிய கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் கைப்பற்றுமா? வாசீம் அக்ரம் கணிப்பு!