பாகிஸ்தானுக்கு எதிரான 183 ரன்கள் எடுப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் நாளை 30 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை தொடர்களில் இந்தியா 7 முறையும், இலங்கை 6 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன. நாளை தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாள் அணிகள் மோதுகின்றன. 2ஆவது போட்டியில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன.
Virat Kohli New Hairstyle: ஆசிய கோப்பைக்கு முன்னதாக புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறிய விராட் கோலி!
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதுவரையில் பெங்களூருவில் உள்ள கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டு வந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய வீரர்கள் இன்று இலங்கை புறப்பட்டுச் செல்கின்றனர்.
Asia Cup 2023: ஆசிய கோப்பை யாருக்கு? பாகிஸ்தான் கைப்பற்றுமா? வாசீம் அக்ரம் கணிப்பு!
இந்த நிலையில், கடந்த 2012 அம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரின் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போட்டியில் விராட் கோலி 183 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் இந்தியா 330 ரன்கள் எடுத்தது. இது குறித்து பேசிய விராட் கோலி கூறியிருப்பதாவது: ஒரு நாள் போட்டிகளில் 183 ரன்கள் எடுப்பேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அந்தப் போட்டியில் ரன்கள் அடிக்க அடிக்க புதிய உற்சாகம் பிறந்தது. எனக்கு அப்போது என்ன தோன்றியதோ, அந்த ஷாட்டுகளை நான் அடித்தேன்.
கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ரெட் கார்டு; பொல்லார்டு கோபம்; சுனில் நரைன் வெளியேற்றம்!
பாகிஸ்தானுக்கு எதிராக 180 ரன்கள் அடிப்பதெல்லாம் எளிதான காரியமில்லை. நான் எப்போதும் விளையாடும் போது சதம் அடிக்க வேண்டும் என்று தான் நினைத்திருக்கிறேன். ஆனால், 183 ரன்களை விளாசுவேன் என்று ஒரு நாளும் நினைத்து கூட பார்க்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக அதிக போட்டிகளிலும் விளையாடியதில்லை என்று கூறியுள்ளார்.