அதிவேகமாக அரைசதம் அடித்த அசால்ட் மன்னன் ரிஷப் பண்ட்!

By Rsiva kumarFirst Published Dec 23, 2022, 2:00 PM IST
Highlights

வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
 

வங்கதேசத்தில் சுற்றுப்ப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒரு நாள் தொடரை இழந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தற்போது தாகாவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய வங்கதேச அணி 227 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக மோமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்தார்.

கேட்ச் பிடிக்க டைவ் அடித்த மெஹிடி: பஞ்சரான மூக்கு!

இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உனட்கட் 2 விக்கெட் எடுத்தார். இதையடுத்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் கே எல் ராகுல் (10), சுப்மன் கில் (20), புஜாரா (24), விராட் கோலி (24) என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிலைத்து நின்று ஆடி ரன்கள் சேர்த்து வந்தனர்.

டெஸ்ட் அரங்கில் 7000 ரன்களை கடந்த புஜாரா!

ஒருபுறம் வானவேடிக்கை காட்டிய ரிஷப் பண்ட் ஒரு கையாலேயே சிக்சரும், பவுண்டரியும் விரட்டினார். இதையெல்லாம் போட்டி பார்த்தால் மட்டுமே ரசிக்க முடியும். அந்தளவிற்கு ரிஷப் பண்டின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ரிஷப் பண்ட் பேட்டிங்கிற்கு வந்துவிட்டாலே வங்கதேச வீரர்கள் பவுண்டரி லைனுக்கு தான் செல்ல வேண்டும். எப்படி ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்று மூக்கில் காயம் அடைந்து மெஹிடி வெளியில் கிளம்பினாரோ, அதே போன்று பண்ட் அடித்த பந்தை சிக்சர் லைனில் வைத்து கேட்ச் பிடிக்க முயன்று மோமினுல் ஹக் தோள்பட்டையை பிடித்துக் கொண்டார். கடைசியாக பண்ட் அடித்த பந்த் சிக்சர் லைனை தாண்டிச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

IPL auction 2023: தோனி முதல் இஷான் கிஷான் வரை - அதிக எக்ஸ்பென்ஷிவ் வீரர்கள் யார் யார்?

52 பந்துகளில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் அதிவேகமாக அரைசதம் அடித்துள்ளார். இதன் மூலம் 11 முறை அரைசதம் கடந்துள்ளார். அதில், 5 முறை வங்கதேச அணிக்கு எதிராக அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இரண்டு முறை அவுட்டிலிருந்து தப்பித்த ஷ்ரேயாஸ் ஐயர் தனது 5 அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதில், 2 வங்கதேச அணிக்கு எதிராக என்பது குறிப்பிடத்தக்கது. டீ பிரேக் இடைவேளையின் போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் சேர்த்துள்ளது.

click me!