ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

By karthikeyan VFirst Published Dec 31, 2022, 1:10 PM IST
Highlights

கார் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரிஷப் பண்ட்டுக்கு தலையில் பலத்த அடிபட்ட நிலையில், அவருக்கு மூளை மற்றும் முதுகுத்தண்டில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளை மற்றும் முதுகில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரியவந்திருப்பது ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.
 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி - டேராடூன் சாலையில் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றபோது, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் வேகமாக தடுப்பில் மோதி பலமுறை சுழன்றுவிழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் தீப்பிடிப்பதற்கு முன்பாக ரிஷப் பண்ட் கார் ஜன்னலை உடைத்து சுற்றியிருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. முகத்தில் காயங்கள் அதிகமிருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலதரப்பினரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது லேசாக கண் அசந்துவிட்டதாகவும், அதனால் தான் கார் விபத்துக்குள்ளானதாகவும் ரிஷப் பண்ட் தெரிவித்திருந்தார். 

ரிஷப் பண்ட்டுக்கு தலையில் பலத்த அடிபட்டிருந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. ஆனால் அவருக்கு தலையில் எந்த பிரச்னையும் இல்லை என்பது எம்.ஆர்.ஐ ஸ்கேன் ரிப்போர்ட்டில் தெரியவந்தது.

ரிஷப் பண்ட்டின் மூளை மற்றும் முதுகுத்தண்டு பகுதிகள் முழுமையாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் மூளை மற்றும் முதுகுத்தண்டு ஆகிய 2 முக்கியமான பாகங்களிலும் எந்த பிரசனையும் இல்லை என்று தெரியவந்தது. மூளை, முதுகுத்தண்டு பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை என்ற தகவல் ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

முழங்கால் மற்றும் கணுக்காலில் கடும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதிகமான வலி காரணமாக நேற்று காலில் எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்படவில்லை. இன்று ஸ்கேன் செய்யப்படவுள்ளது. நெற்றி, புருவம் ஆகிய பகுதிகளிலும் காயம் கடுமையாக உள்ளது. அதற்கெல்லாம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 
 

click me!