BBL: அலெக்ஸ் ஹேல்ஸ், ஆலிவர் டேவிஸ் அதிரடி அரைசதம்..! 20 ஓவரில் 228 ரன்களை குவித்த சிட்னி தண்டர் அணி

By karthikeyan VFirst Published Dec 31, 2022, 11:44 AM IST
Highlights

பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஆலிவர் டேவிஸ் ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்களால் 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது சிட்னி தண்டர் அணி. 229 ரன்கள் என்ற கடின இலக்கை ஹோபர்ட் அணிக்கு சிட்னி தண்டர் நிர்ணயித்துள்ளது.
 

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சிட்னி தண்டர் மற்றும் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

சிட்னி தண்டர் அணி:

அலெக்ஸ் ஹேல்ஸ், மேத்யூ கில்க்ஸ் (விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, ஆலிவர் டேவிஸ், டேனியல் சாம்ஸ், அலெக்ஸ் ரோஸ், பென் கட்டிங், நேதன் மெக் ஆண்ட்ரூ, கிறிஸ் க்ரீன் (கேப்டன்), பிரெண்டன் டாக்கெட், உஸ்மான் காதிர்.

கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி:

டார்ஷி ஷார்ட், காலெப் ஜுவெல், ஷதாப் கான், மேத்யூ வேட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், ஆசிஃப் அலி, ஜேம்ஸ் நீஷம், ஜோயல் பாரிஸ், நேதன் எல்லிஸ், பாட்ரிக் டூலே, ரைலீ மெரிடித்.

முதலில் பேட்டிங்  ஆடிய சிட்னி தண்டர்  அணியின் தொடக்க வீரர் மேத்யூ கில்க்ஸ் அதிரடியாக பேட்டிங் ஆடி 16 பந்தில் 33 ரன்கள் விளாசினார். ரைலீ ரூசோ 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். 74 ரன்களுக்கு சிட்னி தண்டர் அணி 2 விக்கெட்டை இழந்தது. 

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸும் ஆலிவர் டேவிஸும் இணைந்து அடித்து ஆடி அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 105 ரன்களை குவித்தனர். ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலிங்கை அடித்து நொறுக்கிய ஆலிவர் டேவிஸ் 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 65 ரன்களை குவித்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் 45 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 77 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 228 ரன்களை குவித்தது சிட்னி தண்டர் அணி.

229 ரன்கள் என்ற மிகக்கடினமான இலக்கை ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி விரட்டுகிறது.
 

click me!