கவனமாக கார் ஓட்டுடா தம்பி.. 3 ஆண்டுக்கு முன்பே ரிஷப் பண்ட்டை எச்சரித்த ஷிகர் தவான்..! வைரல் வீடியோ

By karthikeyan VFirst Published Dec 31, 2022, 10:33 AM IST
Highlights

ரிஷப் பண்ட்டை கவனமாக கார் ஓட்டுமாறு 3 ஆண்டுகளுக்கு முன் ஷிகர் தவான் எச்சரித்த வீடியோ வைரலாகிவருகிறது.
 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் டெல்லி - டேராடூன் சாலையில் காரை அதிவேகமாக ஓட்டிச்சென்றபோது, சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. கார் வேகமாக தடுப்பில் மோதி பலமுறை சுழன்றுவிழுந்ததால் தீப்பிடித்து எரிந்தது. ஆனால் தீப்பிடிப்பதற்கு முன்பாக ரிஷப் பண்ட் கார் ஜன்னலை உடைத்து சுற்றியிருந்தவர்களின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் டேராடூனில் உள்ள பெரிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது. முகத்தில் காயங்கள் அதிகமிருந்ததால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. தலை மற்றும் முதுகில் எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரியவந்தது.

சபாஷ் சுஷில்.. ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய பஸ் டிரைவருக்கு ரிவார்ட் வழங்கி கௌரவம்

ரிஷப் பண்ட் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலதரப்பினரும் பிரார்த்தனை செய்துவருகின்றனர். காரை வேகமாக ஓட்டிச்சென்றபோது லேசாக கண் அசந்துவிட்டதாகவும், அதனால் தான் கார் விபத்துக்குள்ளானதாகவும் ரிஷப் பண்ட் தெரிவித்திருந்தார். ரிஷப் பண்ட் காரை வேகமாக ஓட்டியதுதான் விபத்துக்கு காரணம்.

இந்நிலையில், 3 ஆண்டுகளுக்கு முன்பே காரை கவனமாக ஓட்டுமாறு ரிஷப் பண்ட்டுக்கு ஷிகர் தவான் அறிவுறுத்திய வீடியோ இப்போது வைரலாகிவருகிறது. 

தினேஷ் கார்த்திக் சொன்னது நடந்தது.. நண்பனை கைவிட்ட கேப்டன் ரோஹித்..! சீனியர் வீரரின் கிரிக்கெட் கெரியர் ஓவர்

2019 ஐபிஎல்லில் ஷிகர் தவான் - ரிஷப் பண்ட் இணைந்து டெல்லி கேபிடள்ஸுக்கு ஆடினர். அப்போது இருவருக்கு இடையேயான ஒரு உரையாடலில், எனக்கு ஏதேனும் அறிவுரை சொல்வதென்றால் என்ன சொல்வீர்கள் என்று ஷிகர் தவானிடம் ரிஷப் பண்ட் கேட்டார். அதற்கு பதிலளித்த ஷிகர் தவான், கார் ஓட்டும்போது கவனமாகவும், மெதுவாகவும் ஓட்டுங்கள் என்று ரிஷப் பண்ட்டுக்கு அறிவுறுத்தினார். அந்த வீடியோ இப்போது வைரலாகிவருகிறது.
 

3 years ago. Shikhar Dhawan’s advice to Rishabh Pant. pic.twitter.com/uMTL0ZtXCe

— Sanket Upadhyay (@sanket)
click me!