IPL 2023: கடைசில நடந்த டுவிஸ்ட்: ஆர்சிபிக்கு நடந்த ஏமாற்றம் - ரூல்ஸ் என்ன சொல்லுது?

Published : Apr 11, 2023, 12:48 PM IST
IPL 2023: கடைசில நடந்த டுவிஸ்ட்: ஆர்சிபிக்கு நடந்த ஏமாற்றம்  - ரூல்ஸ் என்ன சொல்லுது?

சுருக்கம்

மான்கட் முறையில் ரவி பிஷ்னாயை அவுட்டாக்க நினைத்து தவறவிட்ட நிலையில், அவரை ரன் அவுட் முறையில் அவுட் செய்து அப்பீல் கேட்க, நடுவரோ அவுட் இல்லிஅ என்று மறுப்பு தெரிவித்தார்.  

ஐபிஎல் கிரிக்கெட் பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் இருக்கிறது. குஜராத் போட்டியில் கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. அதே போன்று ஆர்பிசி போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

IPL 2023: சும்மா கத்திக்கிட்டே இருக்க கூடாது; கம்முன்னு இருக்கணும்: ரசிகர்களை எச்சரித்த காம்பிர்!

அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 21 ரன்னும், மேக்ஸ்வெல் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாப் டூபிளெசிஸ் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு மேயர்ஸ் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தீபக் கூடா 9 ரன்னில் வெளியேறினார். குர்னல் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து லக்னோ அணி தடுமாறியது. அதன் பிறகு தான் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர், ஆர்சிபி பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

IPL 2023: இதுவரையில் ஆர்சிபியை பொளந்து தள்ளிய கேஎல் ராகுல்: டாப் ஸ்கோரே 132 தான்!

ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ராகுலும் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து 8, 20, 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் 18 ரன்களில் வெளியேறினார். இதுவரையில் லக்னோ ஆடிய 4 போட்டிகளில் மொத்தமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

இவர்களைத் தொடர்ந்து அதிரடி நாயகன் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். களமிறங்கிறது முதல் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். 15 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் நிக்கோலஸ் பூரனும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக கேஎல் ராகுல் 14 பந்துகளில் அரைசதம், பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம், யூசுப் பதான் 15, சுனில் நரைன் 15 மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். 

IPL 2023: நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த மிர்செல் மார்ஷ்;மனைவிக்கு முத்தம் கொடுத்து கட்டியணைத்த டெல்லி வீரர்!

ஒரு கட்டத்தில் லக்னோவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க் வுட்டும் சொல்லும்படி ஒன்றுமில்லை. கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த இம்பேக்ட் பிளேயர் ஆயுஷ் பதானி சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார். ஆனால், அவர் அடித்தது சிக்சர் தான். இதையடுத்து கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 2 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது 5ஆவது பந்தில் உனத்கட் ஆட்டமிழந்தார். கடைசியில் ஆவேஷ் கான் களமிறங்கினார். கடைசி பந்தில் பைஸ் முறையில் ஒரு ரன் கிடைக்க, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், தான் கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். அப்போது கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் லக்னோ வெற்றி. இல்லயென்றால் சூப்பர் ஓவர் என்ற நிலை இருந்தது. கடைசி பந்தை வீச வந்த ஹர்ஹல் படேல் ரவி பிஷ்னாயை மான்கட் செய்யாமல் தவற விட்டு பின்னர் த்ரோ செய்து ரன் அவுட் அப்பீல் செய்தார். அப்போது களத்தில் இருந்த நடுவர், அவுட் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார். புதிய விதிமுறையின்படி, மான்கட் செய்யும்போது பவுலர் முழுவதுமாக தனது கையை சுழற்றாமல் மான்கட் செய்து இருக்க வேண்டும்.  ஆனால், ஹர்ஷல் படேல் அவ்வாறு செய்யவில்லை. அவர் பந்துவீட ஓடி வந்து பாதி தூரம் கிரீசை விட்டு வெளியில் சென்றுவிட்டார். அதன் காரணமாகவே நடுவர் நாட் அவுட் என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

IPL 2023: தோனியின் காலில் விழுந்து வணங்கிய மைதான ஊழியர்: வைரலாகும் புகைப்படம்!

மான்கட் முறைக்கு பெயர் போனவர் ரவிச்சந்திரன் அஸ்வின் தான். இந்த முறை மூலமாக கிரீஸை விட்டு வெளியில் செல்லும் பலருக்கும் எச்சரிக்கை விடுத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 15 ஆம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியும் பெங்களூருவில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!