இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது, என்னால் உதவ முடியாத நிலை - ரவிச்சந்திரன் அஸ்வின்!

By Rsiva kumar  |  First Published Nov 20, 2023, 7:03 PM IST

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வருத்தம் தெரிவித்த நிலையில், ஆஸ்திரேலியாவை பாராட்டவும் செய்துள்ளார்.


இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், இந்தியா முதலில் விளையாடி 240 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேஎல் ராகுல் 66 ரன்கள் எடுத்தார். விராட் கோலி 54, ரோகித் சர்மா 47 ரன்களும் எடுத்தனர். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் 43 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று 6ஆவது முறையாக சாம்பியனானது.

சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு பரிசுத் தொகை எவ்வளவு? இந்தியால வந்து கோடி கோடியா அள்ளிட்டு போகும் ஆஸ்திரேலியா!

Tap to resize

Latest Videos

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலமாக இந்தியா 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி மைதானத்தில் கூடியிருந்த 1,30,000 ரசிகர்களும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். முன்னாள் வீரர்கள், அரசியல் பிரபலங்கள் என்று பலரும் இந்திய அணிக்கு ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், தான் இந்திய அணியில் இடம் பெற்று ஒரு போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் தன் பங்கிற்கு இந்திய அணிக்கு ஆறுதலும், சிறப்பாக விளையாடி 6ஆவது முறையாக சாம்பியனான ஆஸ்திரேலியா அணிக்கு தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (முன்னாள் எக்ஸ்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:

டிரெஸிங் ரூமில் இந்திய வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறிய பிரதமர் மோடி - ரவீந்திர ஜடேஜா பகிர்ந்த புகைப்படம்!

நேற்று இரவு இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த தொடரின் போது அணியில் உள்ள அனைவருக்கும் நினைவில் கொள்ள பல நாட்கள் இருந்தன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால், விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா. எனினும் என்னால் உதவ முடியாது. இருந்தாலும் நவீன கிரிக்கெட் "ஆஸ்திரேலியா" என்ற ஜாம்பவான்களை பாராட்டலாம்.

1995 ரக்பி உலகக் கோப்பையை வென்ற முன்னாள் வீரர் ஹன்னஸ் ஸ்ட்ரைடோம் கார் விபத்தில் பலி!

அவர்கள் நேற்று களத்தில் செய்தது நம்ப முடியாதது. அவர்களது 6ஆவது உலகக் கோப்பை வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி இக்கட்டான சூழலில் இருந்த போது ரோகித் சர்மாவின் தூதுவராக ரவிச்சந்திரன் இருந்துள்ளார். சில போட்டிகளில் இந்திய அணி விக்கெட் கைப்பற்ற தடுமாறும் போது தனது ஆலோசனைகளை ரோகித் சரமாவிற்கு வழங்கியுள்ளார். முன்னாள் வீரர்கள் முதல் கிரிக்கெட் வர்ணனையாளர்கள் வரையில் இறுதிப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினை அணியில் சேர்த்திருக்கலாம் என்று கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Mighty mighty heartbreak last night💔 💔.

Everyone in the team had several days to remember during this campaign👌👌 and special mentions to and 👏👏.

However I can’t help but applaud the giants of modern day cricket “Australia”.…

— Ashwin 🇮🇳 (@ashwinravi99)

 

click me!