தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நடராஜன் இருவரும் தட்டு வடை சாப்பிட்டு கிரிக்கெட் பற்றி விவாதம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 உலகக் கொப்பை தொடரில் இந்திய அணி 2ஆவது முறையாக டிராபி கைப்பற்றியது. இதையடுத்து ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்று தொடரை கைப்பற்றியுள்ளது.
முதல் முறையாக இந்திய அணிக்கு டிராபி வென்று கொடுத்த ஜாம்பவான் கபில் தேவ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு?
undefined
இதையடுத்து வரும் 27 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும், 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரும் அடுத்தடுத்து தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இது தவிர தமிழ்நாடு பிரீமியர் லீக் 2024 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரையில் நடைபெற்ற போட்டிகளின் படி நெல்லை ராயல் கிங்ஸ் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. லைகா கோவை கிங்ஸ் 2 போட்டியிலும் வெற்றி பெற்று 2ஆவது இடத்தில் உள்ளது.
காம்பீர் உடன் மீண்டும் இணையும் ஷ்ரேயாஸ் ஐயர்? பிசிசிஐ கருணை காட்டுமா?
இந்த தொடரில் சேலத்தைச் சேர்ந்த நடராஜன் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதே போன்று ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக இடம் பெற்று விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
அடி மேல் அடி வாங்கிய இலங்கை – டி20 டீம் கேப்டன் பதவியிலிருந்து வணிந்து ஹசரங்கா ராஜினாமா!
இதே போன்று ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியானது விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பயணங்கள் முடிவதில்லை என்ற பெயரில் சேலம் பற்றி விலாக் வெளியிட்டு வருகிறார். அதில், சேலம் ஹீரோ நடராஜனை சந்தித்து அவருடன் தட்டு வடை சாப்பிட்டு கிரிக்கெட் பற்றி கவுன் பனேகா கிரிக்கெட்பதி என்ற பெயரில் கிரிக்கெட் பற்றி இருவரும் விவாதிக்க தொடங்கினர். இது தொடர்பான வீடியோவை அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அஸ்வின் I Have The Streets A Kutti Cricket Story என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.