கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 3ஆவது முறையாக டிராபி வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் பெய்து வரும் மழையையும் பொருட்படுத்தாமல் தீவிர பயிற்சியில் ஷ்ரேயாஸ் ஐயர் ஈடுபட்டு வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் கொல்கத்தா நைடர்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் 3ஆவது முறையாக டிராபி வென்று கொடுத்தார். ஆனால், அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய நிலையில் பிசிசிஐ வெளியிட்ட வருடாந்திர ஒப்பந்தத்தில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அதோடு, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெற்று விளையாடவில்லை.
அடி மேல் அடி வாங்கிய இலங்கை – டி20 டீம் கேப்டன் பதவியிலிருந்து வணிந்து ஹசரங்கா ராஜினாமா!
இதனால், அவர் பிசிசிஐயின் கோபத்திற்கு உள்ளானார். அதுமட்டுமின்றி, அடுத்தடுத்த தொடர்களிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், 3 போட்டிகள் முடிந்த நிலையில் இந்திய அணி 2-1 என்று முன்னிலை பெற்றிருக்கிறது. 4ஆவது போட்டி நாளை நடைபெற இருக்கிறது.
இந்த தொடரைத் தொடர்ந்து இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் மூலமாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் தனது பணியை தொடங்கிறார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் வந்துள்ள நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஏனென்றால், கவுதம் காம்பீர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் கேகேஆர் அணியில் இடம் பெற்றிருந்தனர். காம்பீர் ஆலோசகராகவும், ஷ்ரேயாஸ் கேப்டனாகவும் அணியை வழிநடத்தி டிராபி வென்று கொடுத்தனர்.
இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர். மேலும், விராட் கோலி, ரோகித் சர்மா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு இலங்கை தொடரில் ஓய்வு அளிக்கப்பட இருக்கிறது. இதனால் ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.