பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதுகு வலி காரணமாக இடம் பெறவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான 66ஆவது போட்டி நேற்று தர்மசாலா மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதுகு வலி காரணமாக இடம் பெறவில்லை. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, பிளே ஆஃப் வாய்ப்புக்காக மற்ற அணிகளின் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!
வரும் ஜூன் 7ஆம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கிறது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, கேஎல் ராகுல், கேஎஸ்ல் பரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் மற்றும் ஜெயதேவ் உனத்கட்.
சென்னை ஜெயித்தால் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பு: இல்லாட்டி நடையை கட்ட வேண்டியது தான்!
இதில், கேஎல் ராகுல், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர். ஏற்கனவே கேஎல் ராகுல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக இஷான் கிஷான் அறிவிக்கப்பட்டார்.
ஒரே சீசனில் மோசமான சாதனை படைத்த வீரர்களில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர்!
ஏற்கனவே ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அண்மையில் கேஎல் ராகுலும் காயம் காரணமாக வெளியேறினார். இந்த நிலையில், தற்போது ரவிச்சந்திரன் அஸ்வினும், முதுகு வலி காரணமாக அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால், அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
15 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!
அப்படி அவர் முதுகு வலி காரணமாக இடம் பெறவில்லை என்றால் இந்திய அணிக்கு சிக்கல் ஏற்படும். இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சிட்னி மற்றும் ஹப்பா டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் என்பது குறிப்பிடத்டக்கது.