டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில், இதுவரை குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ், டெல்லி, பஞ்சாப் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன. கேகேஆர் அணிக்கான வாய்ப்பும் குறைவுதான்.
எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் அணி அதன் அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி முடித்துவிட்ட நிலையில், 5ம் இடத்தில் உள்ளது.
லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் அவற்றின் கடைசி லீக் போட்டியில் ஜெயித்தால் லக்னோ, சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை -ஆர்சிபி அணிகளில் ஒன்று நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் முன்னேறும். இரவு கொல்கத்தாவில் நடக்கும் போட்டியில் கேகேஆர் - லக்னோ அணிகள் மோதும் நிலையில், பிற்பகல் டெல்லியில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி கேபிடள்ஸுடன் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சிஎஸ்கே அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சிஎஸ்கே அணி:
ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா.
ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்
டெல்லி கேபிடள்ஸ் அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), ஃபிலிப் சால்ட், ரைலீ ரூசோ, யஷ் துல், அமான் கான், அக்ஸர் படேல், லலித் யாதவ், குல்தீப் யாதவ், சேத்தன் சகாரியா, கலீல் அகமது, அன்ரிக் நோர்க்யா.