IPL 2023: வாழ்வா சாவா போட்டியில் லக்னோ - கேகேஆர் பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்

By karthikeyan V  |  First Published May 20, 2023, 2:59 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் பிளே ஆஃபிற்கு முன்னேறும் மற்றொரு அணியை தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
 


ஐபிஎல் 16வது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடையும் நிலையில், இதுவரை குஜராத் டைட்டன்ஸ் மட்டுமே பிளே ஆஃபிற்கு முன்னேறியுள்ளது. சன்ரைசர்ஸ், டெல்லி, பஞ்சாப் அணிகள் தொடரைவிட்டு வெளியேறிவிட்டன. கேகேஆர் அணிக்கான வாய்ப்பும் குறைவுதான்.

எஞ்சிய 3 இடங்களுக்கு லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி, ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. ராஜஸ்தான் அணி அதன் அனைத்து லீக் போட்டிகளையும் ஆடி முடித்துவிட்ட நிலையில், 5ம் இடத்தில் உள்ளது. 

Latest Videos

IPL 2023: ஐபிஎல்லில் அசத்திய இந்த 3 வீரர்களையும் ODI உலக கோப்பைக்கான இந்திய அணியில் எடுக்கணும் - ரவி சாஸ்திரி

லக்னோ, சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி ஆகிய 4 அணிகளும் அவற்றின் கடைசி லீக் போட்டியில் ஜெயித்தால் லக்னோ, சிஎஸ்கே அணிகள் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். மும்பை -ஆர்சிபி அணிகளில் ஒன்று நெட் ரன்ரேட்டின் அடிப்படையில் முன்னேறும். இன்று பிற்பகல் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது.

இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் லக்னோ அணி கேகேஆரை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் ஜெயித்தால் தான் லக்னோ அணி பிளே ஆஃபிற்கு முன்னேறமுடியும். இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக், தீபக் ஹூடா, பிரெரக் மன்கத், க்ருணல் பாண்டியா (கேப்டன்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, நவீன் உல் ஹக், ரவி பிஷ்னோய், ஸ்வப்னில் சிங், மோசின் கான்.

ICC ODI தரவரிசையில் பாக்., வீரர்கள் ஆதிக்கம்..! கோலி, ரோஹித்தை பின்னுக்குத் தள்ளிய அயர்லாந்து வீரர்

உத்தேச கேகேஆர் அணி: (இம்பேக்ட் பிளேயர் உட்பட)

ரஹ்மானுல்லா குர்பாஸ், ஜேசன் ராய், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா (கேப்டன்), ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் ஷர்மா, வருண் சக்கரவர்த்தி. 
 

click me!