ஒரே சீசனில் மோசமான சாதனை படைத்த வீரர்களில் முதலிடம் பிடித்த ஜோஸ் பட்லர்!

By Rsiva kumar  |  First Published May 20, 2023, 1:23 PM IST

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலமாக ஒரே சீசனில் 5 முறை டக் அவுட் ஆகி மோசமான சாதனை படைத்துள்ளார்.


ஐபிஎல் 2023 கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. ஏற்கனவே டெல்லி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன.

15 ஆண்டுகால சாதனையை முறியடித்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 50 ரன்னில் வெளியேறினார். தேவ்தத் படிக்கல் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தாவில் கனமழை: போட்டி ரத்து செய்யப்பட்டால் பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு?

இந்தப் போட்டியில் ஜோஸ் பட்லர் டக் அவுட்டானது மூலமாக 5 முறை டக் அவுட்டாகியுள்ளார். அதோடு, இந்த சீசனில் அதிக முறை டக் அவுட்டான வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த சீசனில் அவர் 392 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 85 இன்னிங்ஸில் ஒரு முறை டக் அவுட்டான பட்லர், கடந்த 10 போட்டிகளில் 5 முறை டக் அவுட்டாகியுள்ளார்.

9ஆவது முறையாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறிய பஞ்சாப்!

click me!