உலக கோப்பைக்கு திலக் வர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் சரியான தேர்வு என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
இந்தியா அடுத்தடுத்த முக்கியமான தொடர்களில் பங்கேற்கிறது. ஆசிய கோப்பை இந்த மதம் 30 ஆம் தேதியும், உலக கோப்பை அக்டோபர் 5 ஆம் தேதியும் தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்று விளையாடி பல சாதனகளை படைத்தார் யஷஸ்வி ஜெய்ஸவால். ஆனால், ஒரு நாள் போட்டிகளில் இடம் பெறவில்லை. டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இடம் பெற்று விளையாடினார். எனினும், பெரிதாக தாக்கத்தை ஒன்றும் ஏற்படுத்தவில்லை. இதே போன்று திலக் வர்மா டி20 போட்டிகளில் இடம் பெற்று 39, 51, 49, 7 மற்றும் 29 ரன்கள் குவித்துள்ளார்.
முதல் போட்டியில் விளையாடுகிறோம் என்ற பய உணர்வு இல்லாமல் அவர் விளையாடி விதம் சிறப்பாக இருந்தது. திலக் வர்மாவின் சிறப்பான பேட்டிங்கால், அவரை ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்க நிபுணர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளன. பல நிபுணர்களில், முன்னாள் இந்திய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் தேர்வாளர்கள் வர்மாவை தேர்வு செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
World Athletics: உலக தடகள துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அடில்லே ஜே சுமாரிவாலா!
இதே போன்று டெஸ்ட் போட்டிகளில் பல சாதனைகள் படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலையும் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஜெய்ஸ்வால் மற்றும் திலக் வர்மா இருவரும் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் சிறந்துவிளங்கி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் திலக் வர்மா 2 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
Asia Cup 2023: உலகக் கோப்பை கனவு முடிந்தது: ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கப்படலாம்!
ஓரிரு நாட்களில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் நிலையில், செப்டம்பர் 5 ஆம் தேதிக்குள் உலகக் கோப்பைக்கான தற்காலிக அணியை இந்தியா அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 18 பேர் கொண்ட அணி பின்னர் 15 பேர் கொண்ட அணியாக குறைக்கப்படலாம்.
ஆசியக் கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!
அயர்லாந்துக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்தப் போட்டியை ஜியோ சினிமா மற்றும் Viacom18 க்கு சொந்தமான ஸ்போர்ட்ஸ் 18 இல் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கலாம்.