Ireland vs India: 1st T20: முதல் முறையாக கேப்டனான ஜஸ்ப்ரித் பும்ரா: இன்று இந்தியா – அயர்லாந்து பலப்பரீட்சை!

By Rsiva kumar  |  First Published Aug 18, 2023, 10:13 AM IST

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.


வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து இந்திய அணி தற்போது 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்காக அயர்லாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டப்ளின் மைதானத்தில் நடக்கிறது. இதற்காக ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் சில தினங்களுக்கு முன்பு டப்ளின் புறப்பட்டுச் சென்றனர். தற்போது அங்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

World Athletics: உலக தடகள துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அடில்லே ஜே சுமாரிவாலா!

Tap to resize

Latest Videos

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா, சுப்மன் கில், இஷான் கிஷான், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக ஓய்வில் இருந்த ஜஸ்ப்ரித் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Asia Cup 2023: உலகக் கோப்பை கனவு முடிந்தது: ஆசிய கோப்பையில் சஞ்சு சாம்சன் நீக்கப்படலாம்!

காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்ட் வந்த பும்ரா, தனது உடல் தகுதியை நிரூபித்த நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடரின் மூலமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

அதுமட்டுமின்றி அவர் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலமாக டி20 போட்டிகள் கொண்ட இந்திய அணிக்கு 11 ஆவது கேப்டனாக பும்ரா இன்று செயல்பட உள்ளார். மேலும், ஒரு வேகப்பந்து வீச்சாளராக டி20 போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்தும் முதல் வீரர் என்ற சாதனையை படைக்கிறார். இதற்கு முன்னதாக, விரேந்திர சேவாக், எம்.எஸ்.தோனி, சுரேஷ் ரெய்னா, அஜிங்க்யா ரஹானே, விராட் கோலி, ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோர் கேப்டனாக செயல்பட்டுள்ளனர்.

ஆசியக் கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

இதுவரையி, இரு அணிகளும் 5 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், இந்தியா தான் 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது. அயர்லாந்து அணி 221 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்வாட், திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), முகேஷ் குமார், ஆவேஷ் கான், ஜித்தேஷ் சர்மா, பிரஷித் கிருஷ்ணா, ஷாபாஸ் அகமது.

அயர்லாந்து:

ஆண்ட்ரூ பல்பிர்னி, பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்), ஹாரி டெக்டர், கரேத் டெலானி, கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அடேர், பேரி மெக்கார்த்தி, ஜோசுவா லிட்டில், பெஞ்சமின் ஒயிட், ஃபியோன் ஹேண்ட், கிரேக் யங், தியோ வான் வோர்கோம், ரோஸ் அடார்

இந்தப் போட்டியை இந்தியாவில் Viacom18 க்கு சொந்தமான ஸ்போர்ட்ஸ் 18 இல் தொலைக்காட்சியில் நேரடியாக பார்க்கலாம். இதே போன்று ஜியோ சின்மாவிலும் இந்தப் போட்டியை பார்க்கலாம்.

click me!