விராட் கோலியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை - ராம் சரண் ஓபன் டாக்!

By Rsiva kumarFirst Published Mar 18, 2023, 5:09 PM IST
Highlights

விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தனக்கு நடிக்க ஆசை இருப்பதாக நடிகர் ராம் சரண் தெரிவித்துள்ளார்.
 

சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நாளுக்கு நாள் கிரிக்கெட் விளையாட்டின் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. உலகில் வாழும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியை ரசித்து வருகின்றனர். இந்தியாவில் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று கிரிக்கெட் என்று கூட சொல்லலாம். கிரிக்கெட் வீரர்களுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிரிக்கெட் விளையாடினாலும் சரி, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் சரி, அவர்களைக் கண்ட போதெல்லாம் அவர்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது.

IND vs AUS 2nd ODI: புதிய சிக்கலில் ரோகித் சர்மா - 2ஆவது ODIயில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட ஆவணப்படமாக Sachin A Billion Dreams எடுக்கப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து கூல் கேப்டன் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு M.S. Dhoni - The Untold Story என்று படமாக எடுக்கப்பட்டது. இந்தப் படத்தில் தோனியின் கதாபாத்திரத்தில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடித்திருந்தார். இதே போன்று கடந்த 1983 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டது. 83 என்று உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடித்திருந்தார். நடிகர் ஜீவா, தீபிகா படுகோனே ஆகியோர் பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

காலில் அறுவை சிகிச்சை செய்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிரட்டி ரவீந்திர ஜடேஜா படைத்த சாதனைகள்!

இந்த நிலையில், சச்சின், எம் எஸ் தோனி, கபில் தேவ் ஆகியோரைத் தொடர்ந்து, விராட் கோலியின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்பட இருக்கிறது. ஆம், விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்க தனக்கு ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: தொடர்ந்து பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளே.

இதுவரையில் விளையாட்டு தொடர்புடைய படங்களில் நடிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்று கூறியுள்ளார். உடனே, விராட் கோலியின் ரோலில் நடிக்க விருப்பமா என்று அவரிடம் கேட்கப்பட்டது. அற்புதம், அவர்தான் ஊக்கத்தை அளிக்க கூடியவர். ஒரு வாய்ப்பு கிடைத்தால், அவரைப் போன்று நடிப்பது அருமையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

159 ஆஸ்திரேலியாவுல, 188 இந்தியாவுல - இரண்டிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோலி நாட்டு நாட்டு பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. சமீபத்தில் நடந்த ஆஸ்கர் விருது விழாவிலும் சிறந்த ஒரிஜினல் பாடல் என்கிற பிரிவில் விருது வென்று அசத்தியது. இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்திய பாடல் என்கிற பெருமையும் நாட்டு நாட்டு நாட்டு பாடல் பெற்றது.  ஆஸ்கர் விருது கிடைத்ததை அடுத்து இப்பாடல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!