லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 4ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்துள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐபிஎல் 2024 தொடரின் 4ஆவது போட்டி நடைபெற்று வருகிறது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்ஆர் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
போட்டியின் முதல் ஓவரிலேயே தாமதம் ஏற்பட்டது. அதாவது, ஸ்பைடர் கேமராவின் வயர் அறுந்து விழுந்ததால் தாமதம் ஏற்பட்டது. இதில், போட்டியின் 2ஆவது ஓவரில் ஜோஸ் பட்லர் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 24 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி வந்தனர்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் அரைசதம் அடித்து வருகிறார். இதற்கு முன்னதாக,
2020 – 74 ரன்கள் – சென்னை சூப்பர் கிங்ஸ்
2021 – 119 ரன்கள் – பஞ்சாப் கிங்ஸ்
2022 – 55 ரன்கள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2023 – 55 ரன்கள் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
2024 – 59* ரன்கள் – லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
என்று வரிசையாக அரைசதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த சீசனில் இதுவரையில் நடந்த போட்டிகளில் ஒரு கேப்டன் கூட அரைசதம் அடிக்கவில்லை. இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் வீரர் சாம் கரண் முதல் அரைசதம் அடித்த போதிலும், ஒரு கேப்டனாக சஞ்சு சாம்சன் முதல் அரைசதம் அடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் – 35 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்வ்காட் – 15 ரன்கள்
டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் – 18 ரன்கள்
பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் – 22 ரன்கள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் – டக் அவுட்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் – பேட் கம்மின்ஸ் – நாட் அவுட்.