ஜெய்ப்பூர் கோட்டையில் பேட்டிங் தேர்வு செய்த சஞ்சு சாம்சன் – சவாய் மான்சிங் ஸ்டேடியம் யாருக்கு சாதகம்?

By Rsiva kumar  |  First Published Mar 24, 2024, 3:29 PM IST

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 4ஆவது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது பேட்டிங் தேர்வு செய்துள்ளது.


ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசனில் இன்று நடக்கும் 4ஆவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி ராஜஸ்தான் அணியின் கோட்டையான ஜெய்ப்பூரில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

Tap to resize

Latest Videos

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரான் ஹெட்மயர், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் சர்மா, ஆவேஷ் கான், டிரெண்ட் போல்ட், யுஸ்வேந்திர சாகல்.

சப்ஸ்டிடியூட் பிளேயர்: நந்த்ரே பர்கர், ரோவ்மன் பவல், தனுஷ் கோட்டியம் ஷுபம் துபே, குல்தீப் சென்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயீண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஆயூஷ் பதானி, மார்கஸ் ஸ்டாய்னிஸ், நிக்கோலஸ் பூரன், குர்ணல் பாண்டியா, ரவி பிஷ்னோய், மோசின் கான், நவீன் உல் காக், யாஷ் தாக்கூர்.

சப்ஸ்டிடியூட் பிளேயர்: தீபக் கூடா, மாயங்க் யாதவ், அமித் மிஸ்ரா, பிரேரக் மான்கட், கிருஷ்ணப்பா கௌதம்.

இதற்கு முன்னதாக 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இரு அணிகளும் மோதிய 3 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தான் 2 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஒரு முறை வெற்றி பெற்றுள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IPL (@iplt20)

 

click me!