ஐபிஎல் நியூ டிரெண்ட் – ஒரு நிமிஷத்துல ஷாக் கொடுத்த ஸ்டப்ஸ் – போராடி தோற்ற டெல்லி கேபிடல்ஸ்!

Published : Mar 28, 2024, 11:53 PM IST
ஐபிஎல் நியூ டிரெண்ட் – ஒரு நிமிஷத்துல ஷாக் கொடுத்த ஸ்டப்ஸ் – போராடி தோற்ற டெல்லி கேபிடல்ஸ்!

சுருக்கம்

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஐபிஎல் ஹோம் டிரெண்டில் இடம் பெற்று வருகிறது.

ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 9ஆவது லீக் போட்டி நடந்தது. இதில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரியான் பராக் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். ரியான் பராக் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது.

டெல்லி அணிக்காக 100ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடும் ரிஷப் பண்ட்!

பின்னர், 186 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் செய்தது. டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் இணைந்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த பூய் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 49 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். அதன் பிறகு வந்த கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களில் வெளியேற, டெல்லி கேபிடல்ஸ் 13.1 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தது.

SRH vs MI, IPL 2024: ஒன்னா, ரெண்டா, ஒவ்வொரு அடியும் இடி மாதிரில விழுந்துச்சு - SRH படைத்த சாதனைகளின் பட்டியல்!

அதன் பிறகு டெல்லி வெற்றிக்கு 41 பந்துகளில் 80 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், களத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரெல் இருந்தனர். இதில், போரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க ஸ்டப்ஸ் உடன் அக்‌ஷர் படேல் இணைந்தார். ஆனால், படேல் பெரிதாக ஒன்றும் அடிக்கவில்லை. மறுபுறம் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாட டெல்லி வெற்றியை நோக்கி சென்றது. எனினும், கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த ஓவரை ஆவேஷ் கான் சிறப்பாக வீசி 5 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இதன் மூலமாக டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கல்ள் மட்டுமே எடுத்து 12 ரன்களில் தோல்வியை தழுவியது.

ஒரே ஓவரில் டர்னிங் பாய்ண்டான போட்டி – மைதானத்தையே அலற வைத்த ரியான் பராக்கின் வான வேடிக்கை ஷாட்!

இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த சீசனில் விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த சீசனில் புதிதாக ஹோம் மைதானம் ஒவ்வொரு அணிக்கும் ஒர்க் அவுட்டாகி வருகிறது. அதன்படி ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டி ராஜஸ்தானுக்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. இந்தப் போட்டி உள்பட இதுவரையில் நடந்த 9 போட்டிகளில் அந்தந்த ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்த வரையில் பவுலிங்கில் நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாகல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.

சிக்ஸர் அடிச்சு ஆரம்பிச்சு வச்ச அஸ்வின் – 4, 4, 6, 4, 6 என்று முடித்த ரியான் பராக் – 185 ரன்கள் குவித்த RR!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

Women's T20 World Cup: பாகிஸ்தானை அசால்ட்டாக போட்டுத் தள்ளிய இந்தியா! தீப்தி சர்மா, ஸ்மிருதி மந்தனா கலக்கல்!
Shubman Gill: 3000 ரன்கள்... அம்லாவை நெருங்கிய சுப்மன் கில்! ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இந்தியா