IND vs NZ 2nd ODI: இதான் ஃபர்ஸ்ட் மேட்ச்: பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமா? பௌலிங்கிற்கு சாதகமா?

By Rsiva kumar  |  First Published Jan 20, 2023, 5:14 PM IST

ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண சிங் சர்வதேச மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் போட்டி என்பதால் பிட்ச் எப்படி இருக்குமோ என்பது குறித்து யாருக்கும் தெரியாது.


நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. இதில், டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்தது. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் அதிரடியாக ஆடி ஹாட்ரிக் சிக்சர் அடித்து தனது முதல் இரட்டை சதத்தை பூர்த்தி செய்து விராட் கோலி, ஹர்திக் பாண்டியா சாதனையை முறியடித்தார். அவர், 149 பந்துகளில் 9 சிக்சர்கள், 19 பவுண்டரிகள் உள்பட 208 ரன்கள் எடுத்தார். அதுமட்டுமின்றி 2 ரன்களில் இஷான் கிஷானின் சாதனையையும் முறியடிக்க கோட்டைவிட்டார்.

அப்பாவுக்கு தப்பாத புள்ள: விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் -யு14ல் கர்நாடகா அணிக்கு கேப்டனான ராகுல் டிராவிட் மகன்!

Tap to resize

Latest Videos

ஹர்திக் பாண்டியாவிற்கு மூன்றாவது நடுவர் தவறான அவுட் கொடுக்க அவர் 28 ரன்களில் வெளியேறினார். சூர்யகுமார் யாதவ் 31 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து கடின இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு பிரேஸ்வெல் மற்றும் சான்ட்னர் இருவரும் ஜோடி சேர்த்து இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். காட்டு காட்டுன்னு காட்டிய பிரேஸ்வேல் 10 சிக்சர்கள், 12 பவுண்டர்கள் அடித்த நிலையில், 78 பந்துகளில் 140 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் அவுட்டானார். இதன் மூலமாக நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது.

Gabba Test: வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்தியா: நினைவு கூர்ந்து டுவிட்டரில் வாழ்த்து!

இதன் மூலம் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை ராய்ப்பூர் மைதானத்தில் நடக்க இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் ராய்ப்பூர் வந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

குட்லக் டீம் இந்தியா: ராய்பூரில் உற்சாக வரவேற்பு: வீரர்களைக் கண்டு துள்ளிக் குதித்த ரசிகர்கள்!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண சிங் மைதானத்தில் நடக்கும் இந்த 2ஆவது ஒரு நாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் நேருக்கு நேர் முதல் முறையாக மோதிக் கொள்கின்றன. ஆகையால், இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்குமா? அல்லது பவுலிங்கிற்கு சாதகமாக இருக்குமா? என்பது குறித்து தெரியாது. அப்படியிருக்கும் போது இந்தப் போட்டியில் டாஸ் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இவ்வளவு அதிக ஸ்கோர் கொண்ட ஒரு போட்டியை ஹைதராபாத் பார்த்ததில்லை: முகமது அசாருதீன்!

click me!