BBL: 2வது குறைவான ஸ்கோருக்கு அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை சுருட்டி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் சாதனை வெற்றி

By karthikeyan VFirst Published Jan 20, 2023, 3:56 PM IST
Highlights

பிக்பேஷ் லீக் 12வது சீசனின் 2வது குறைவான ஸ்கோருக்கு அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை சுருட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அபார வெற்றி பெற்றது.
 

பிக்பேஷ் டி20 லீக்கின் 12வது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று அடிலெய்டில் நடந்த போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி:

மேத்யூ ஷார்ட், டிராவிஸ் ஹெட் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஆடம் ஹோஸ், காலின் டி கிராண்ட் ஹோம், தாமஸ் கெல்லி, ஹாரி நீல்சன், பென் மானெண்டி, கேமரூன் பாய்ஸ், வெஸ் அகர், பீட்டர் சிடில்.

ஃபிட்டா, ட்ரிம்மா இருந்தால் தான் இந்திய அணியில் இடமா..? ஃபேஷன் ஷோவுக்கா ஆள் எடுக்குறீங்க..? கவாஸ்கர் அதகளம்

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

கேமரூன் பான்கிராஃப்ட், ஸ்டீஃபன் எஸ்கினாஸி, ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), நிக் ஹாப்சன், அஷ்டான் அகர், ஆண்ட்ரூ டை, டேவிட் பெய்ன், பீட்டர் ஹாட்ஸோக்லு, லான்ஸ் மோரிஸ்.

முதலில் பேட்டிங் ஆடிய அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியில் ஆடம் ஹோல்ஸ் மட்டுமே அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். 23 பந்தில் ஆடம் ஹோஸ் 30 ரன்கள் அடித்தார். டி கிராண்ட் ஹோம் மற்றும் வெஸ் அகர் ஆகிய இருவரும் தலா 11 ரன்கள் அடித்தனர். மற்ற அனைத்து வீர்ரர்களும் ஒற்றை இலக்கத்தில் மளமளவென ஆட்டமிழக்க, அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 92 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய பெய்ன், லான்ஸ் மோரிஸ், பீட்டர் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். இந்த சீசனில் இதுவே ஒரு அணி அடித்த 2வது குறைந்தபட்ச ஸ்கோர். இந்த போட்டியில் 92 ரன்களுக்கு ஆல் அவுட்டான இதே அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தான், சிட்னி தண்டரை இந்த சீசனில் வெறும் 15 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சக்ஸஸ்.. பேஷண்ட் டெத்..! நியூசி.,க்கு எதிரான ODI-யில் ஜெயித்த இந்திய அணிக்கு இப்படியொரு சோதனையா..?

93 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி, 12வது ஓவரிலேயே இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

click me!