ENG vs IND: பவுலிங்கில் பட்டைய கிளப்பும் பும்ரா.. 3 விக்கெட்டை தட்டி தூக்கிய கேப்டன்! புகுந்து விளையாடும் மழை

By karthikeyan VFirst Published Jul 2, 2022, 9:01 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் பும்ரா அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்திவரும் நிலையில், மழை குறுக்கீட்டால் ஆட்டம் அவ்வப்போது தடைபடுகிறது.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 98 ரன்களுக்கே கோலி, புஜாரா, கில், விஹாரி, ஷ்ரேயாஸ் ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது இந்திய அணி.

இதையும் படிங்க - அப்போ யுவராஜ்.. இப்போ பும்ரா..! இந்திய வீரர்களால் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அசிங்கப்பட்ட ஸ்டூவர்ட் பிராட்

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர். 89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  ஜடேஜாவும் சதமடிக்க (104), கடைசி நேரத்தில் பும்ராவும் காட்டடி அடித்து 16 பந்தில் 31 ரன்களை விளாச, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - ENG vs IND: இந்திய அணி நிர்வாகத்தின் இந்த துணிச்சலான முடிவு பலன் தந்தது.. பாராட்டியே தீரணும்

2ம் நாள் ஆட்டத்தின் முதல் செசனில் இந்திய அணி முதல் இன்னிங்ஸை முடித்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கிய 3வது ஓவரிலேயே தொடக்க வீரர் அலெக்ஸ் லீஸை 6 ரன்களுக்கு போல்டாக்கி அனுப்பினார் பும்ரா. மதிய உணவு இடைவேளை முடிந்து மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. 

2வது செசன் தொடங்கியதும் மற்றொரு தொடக்க வீரரான ஜாக் க்ராவ்லியையும் 9 ரன்னில் வீழ்த்தினார் பும்ரா. மீண்டும் மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது. அதன்பின்னர் ஆட்டம் தொடங்கியதும் 3ம் வரிசையில் இறங்கிய ஆலி போப்பையும் (10) பும்ராவே வீழ்த்தினார். 

மழை குறுக்கீட்டால் ஆட்டம் அவ்வப்போது பாதிக்கப்பட்டாலும், கிடைக்கும் கேப்பில் எல்லாம் விக்கெட் வீழ்த்தினார் பும்ரா. இங்கிலாந்து அணி  3 விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் அடித்துள்ள நிலையில், மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டுள்ளது. ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். பேட்டிங்கில் அசத்திய இந்திய அணியின் கேப்டன் பும்ரா, பவுலிங்கிலும் அபாரமாக செயல்பட்டு 3 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
 

click me!