PSL 2023: எலிமினேட்டர் மேட்ச்சில் முகமது ஹாரிஸ் அபார அரைசதம்! லாகூர் அணிக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த பெஷாவர்

By karthikeyan VFirst Published Mar 17, 2023, 9:39 PM IST
Highlights

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2வது எலிமினேட்டர் போட்டியில் லாகூர் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி 20 ஓவரில்171 ரன்கள் அடித்து, 172 ரன்கள் என்ற சவாலான இலக்கை லாகூர் காலண்டர்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முல்தான் சுல்தான்ஸ், லாகூர் காலண்டர்ஸ், பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் தகுதிச்சுற்றுக்கு முன்னேறின.

முதல் தகுதிப்போட்டியில் லாகூர் காலண்டர்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. முதல் எலிமினேட்டரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற பெஷாவர் ஸால்மியும், தகுதிப்போட்டியில் தோற்ற லாகூர் காலண்டர்ஸும் 2வது எலிமினேட்டரில் இன்று ஆடிவருகின்றன. 

லாகூரில் நடந்துவரும் இந்த எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் முல்தான் சுல்தான்ஸை எதிர்கொள்ளும். ஃபைனலுக்கு முன்னேற நாக் அவுட் போட்டியான இந்த எலிமினேட்டரில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

IND vs AUS: கேஎல் ராகுல் அபார அரைசதம்.. ஜடேஜா பொறுப்பான பேட்டிங்..! முதல் ODI-யில் இந்தியா வெற்றி

பெஷாவர் ஸால்மி அணி: 

சயிம் அயுப், பாபர் அசாம் (கேப்டன்), டாம் கோலர் காட்மோர், முகமது ஹாரிஸ், பானுகா ராஜபக்சா, ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), ஆமிர் ஜமால், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், வஹாப் ரியாஸ், முஜீபுர் ரஹ்மான், சல்மான் இர்ஷத்.

லாகூர் காலண்டர்ஸ் அணி: 

மிர்ஸா தாஹிர் பைக், ஃபகர் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆசன் பட்டி, சிக்கந்தர் ராஸா, டேவிட் வீஸ், ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய பெஷாவர் ஸால்மி அணியின் தொடக்க வீரர் சயிம் அயுப் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான பாபர் அசாமும், முகமது ஹாரிஸும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 2வது விக்கெட்டுக்கு 89 ரன்களை சேர்த்தனர். பாபர் அசாம் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த முகமது ஹாரிஸ் 54 பந்தில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 85 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 171 ரன்கள் அடித்த பெஷாவர் ஸால்மி, நாக் அவுட் போட்டியில் லாகூர் காலண்டர்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.
 

click me!