PSL 2023: ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்? 2வது எலிமினேட்டரில் லாகூர் - பெஷாவர் அணிகள் மோதல்! டாஸ் ரிப்போர்ட்

Published : Mar 17, 2023, 07:31 PM IST
PSL 2023: ஃபைனலுக்கு முன்னேறப்போவது யார்? 2வது எலிமினேட்டரில் லாகூர் - பெஷாவர் அணிகள் மோதல்! டாஸ் ரிப்போர்ட்

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஃபைனலுக்கு தகுதிபெறுவதற்கான 2வது எலிமினேட்டரில் லாகூர் காலண்டர்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. முல்தான் சுல்தான்ஸ், லாகூர் காலண்டர்ஸ், பெஷாவர் ஸால்மி மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகள் தகுதிச்சுற்றுக்கு முன்னேறின.

முதல் தகுதிப்போட்டியில் லாகூர் காலண்டர்ஸை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அணி நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது. முதல் எலிமினேட்டரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற பெஷாவர் ஸால்மியும், தகுதிப்போட்டியில் தோற்ற லாகூர் காலண்டர்ஸும் 2வது எலிமினேட்டரில் இன்று மோதுகின்றன. 

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

லாகூரில் நடக்கும் இந்த எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணி ஃபைனலில் முல்தான் சுல்தான்ஸை எதிர்கொள்ளும். ஃபைனலுக்கு முன்னேற நாக் அவுட் போட்டியான இந்த எலிமினேட்டரில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பெஷாவர் ஸால்மி அணி: 

சயிம் அயுப், பாபர் அசாம் (கேப்டன்), டாம் கோலர் காட்மோர், முகமது ஹாரிஸ், பானுகா ராஜபக்சா, ஹசீபுல்லா கான் (விக்கெட் கீப்பர்), ஆமிர் ஜமால், அஸ்மதுல்லா ஓமர்ஸாய், வஹாப் ரியாஸ், முஜீபுர் ரஹ்மான், சல்மான் இர்ஷத்.

கவாஸ்கர் சொன்னது தவறு.. ராகுல்லாம் வேலைக்கு ஆகமாட்டார்.. ICC WTC ஃபைனலில் அந்த பையன் தான் ஆடுவான்- சபா கரிம்

லாகூர் காலண்டர்ஸ் அணி: 

மிர்ஸா தாஹிர் பைக், ஃபகர் ஜமான், அப்துல்லா ஷாஃபிக், சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆசன் பட்டி, சிக்கந்தர் ராஸா, டேவிட் வீஸ், ரஷீத் கான், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஹாரிஸ் ராஃப், ஜமான் கான்.

PREV
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?