மது போதையில் சமையல் பாத்திரம் கொண்டு மனைவி மீது தாக்குதல்: வினோத் காம்ப்ளி மீது புகார்!

Published : Feb 05, 2023, 11:46 AM IST
மது போதையில் சமையல் பாத்திரம் கொண்டு மனைவி மீது தாக்குதல்: வினோத் காம்ப்ளி மீது புகார்!

சுருக்கம்

மது போதையில் தன்னை தாக்கியதாக முன்னாள் கிரிகெகெட் வீரர் வினோத் காம்ப்ளி மீது அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.   

மகாராஷ்டிரா மாநிலம் பாந்த்ரா பகுதியில் உள்ள பிளாட் ஒன்றில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், காம்ப்ளியின் மனைவி தன்னை அடித்து துன்புறுத்துவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து காம்ப்ளி மீது ஐபிசி பிரிவு 324 (அபாயகரமான ஆயுதங்களால் காயப்படுத்துதல்) மற்றும் 504 (அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை என்று சொல்லப்படும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாந்த்ரா போலீசார் தெரிவித்தனர்.

ஷிகர் தவானின் மொபைல் போனை ஆட்டைய போட்டு டான்ஸ் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர்!

போலீசார் பதிவு செய்துள்ள எஃப்ஐஆரில் கூறியிருப்பதாவது: பிற்பகல் 1 மணியிலிருந்து 1.30 மணிக்குள்ளாக குடி போதையில் வீட்டிற்கு வந்த காம்ப்ளி மனைவி மீது சண்டையிட்டுள்ளார். அதன் பிறகு கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற காம்ப்ளி நேரடியாக சமையலறைக்கு சென்று சமையல் செய்யும் பாத்திரம் கொண்டு மனைவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில், ரத்தக் காயம் ஏற்பட்ட நிலையில், காம்ப்ளியின் மனைவி பாபா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பிறகு தான் காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளார். இதற்கு சாட்சியாக அவரது 12 வயது மகன் இருந்துள்ளார் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் தோற்று உலக குரூப் 2 சுற்றுக்கு தள்ளப்பட்ட இந்தியா!

இதையடுத்து பேசிய காம்ப்ளியின் மனைவி கூறியிருப்பதாவது: குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த காம்ப்ளி காரணமே இல்லாமல் அடிக்க ஆரம்பித்தார். சமையலறையிலிருந்த பாத்திரம் கொண்டு முதலில் தாக்கினார். அதன் பிறகு கிரிக்கெட் பேட் கொண்டு தாக்குதல் நடத்தினார். நான் அவரை தடுத்து நிறுத்த முயற்சி செய்தேன். அதன் பிறகு மகனை அழைத்துக் கொண்டு முதலில் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.

ஏன் பார்டர் கவாஸ்கர் டிராபி முக்கியம்: இதுவரையில் நடந்த டிராபி தொடரில் என்னென்ன சம்பவங்கள் நடந்தது?

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

IPL: தோனி முதல் ரிஷப் பண்ட் வரை.. ஐபிஎல்லில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் யார்? யார்? முழு லிஸ்ட்!
யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!