கோலி, புஜாரா, ரோஹித்லாம் இல்ல.. டெஸ்ட்டில் அவர்தான் இந்திய பேட்டிங் ஆர்டரின் முதுகெலும்பு..! அஷ்வின் அதிரடி

By karthikeyan VFirst Published Feb 4, 2023, 10:23 PM IST
Highlights

இந்திய டெஸ்ட் அணியின் பேட்டிங் ஆர்டரில் யார் முதுகெலும்பு என்று ரவிச்சந்திரன் அஷ்வின் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்குகிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதி. 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 அல்லது 2-1 என ஜெயிக்க வேண்டும். எனவே இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன்..!

2004ம் ஆண்டுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவிடம் 2 முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது. எனவே இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர்.

இந்திய அணியை பொறுத்தமட்டில் பேட்டிங்கில் கோலி, புஜாரா மற்றும் பவுலிங்கில் அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகியோரும் சிறப்பாக செயல்பட வேண்டும். டெஸ்ட் அணியில் பேட்டிங் ஆர்டரில் கோலி, புஜாரா ஆகிய இருவரும் தான் முக்கியமான வீரர்களாக கருதப்படும் நிலையில், அவர்களை விட ஷ்ரேயாஸ் ஐயர் தான் முக்கியமான வீரர் என்று ரவிச்சந்திரன்  அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் இவர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி

இதுகுறித்து பேசியுள்ள அஷ்வின், ஷ்ரேயாஸ் ஐயர்  டெஸ்ட்டில் மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட்டுடன் இணைந்து கடந்த 2 ஆண்டுகளில் நிறைய ஆடியிருக்கிறார். அவர்தான் இந்திய பேட்டிங் ஆர்டரின் முதுகெலும்பு. ரிஷப் பண்ட்டும் ஆடாத நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தான் முக்கியமான வீரராக திகழ்வார். ஆனால் முதுகு வலிக்கு சிகிச்சை பெற்றுவருகிறார்; பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் அஷ்வின்.
 

click me!