IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் இவர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி

By karthikeyan V  |  First Published Feb 4, 2023, 8:24 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் அக்ஸர் படேல் தான் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்குகிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதி. 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 அல்லது 2-1 என ஜெயிக்க வேண்டும். எனவே இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

Tap to resize

Latest Videos

BBL: டைட்டில் வின்னர், ரன்னருக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? யார் யாருக்கு என்னென்ன அவார்ட்..? முழு விவரம்

இந்திய ஆடுகளங்கள் ஸ்பின்னிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இரு அணிகளிலும் சீனியர் ஸ்பின்னர்கள் இருப்பதால், ஸ்பின்னை திறம்பட எதிர்கொள்ளும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இந்திய வீரர்கள் நேதன் லயனின் ஸ்பின்னை சிறப்பாக ஆடவேண்டும். அதேபோல சொந்த மண்ணில் செம கெத்தான ஸ்பின்னரான அஷ்வினை ஆஸ்திரேலிய அணி சமாளித்து சிறப்பாக ஆடினால் மட்டுமே அந்த அணிக்கு வெற்றி வசப்படும்.

இந்திய அணியில் முக்கியமான பேட்ஸ்மேன்கள் - கோலி, புஜாரா; பவுலர்கள் - அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல். அதேபோல ஆஸ்திரேலிய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன்கள் - ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன்; பவுலர்கள் - நேதன் லயன், பாட் கம்மின்ஸ், அஷ்டான் அகர்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் மிகப்பெரிய வீரர்களான கோலியும் ஸ்மித்தும் செம ஃபார்மில் இருக்கின்றனர். எனவே இரு அணிகளில் எந்த அணி இந்த வீரர்களை பெரிய ஸ்கோர் அடிக்கவிடாமல் கட்டுப்படுத்துகிறதோ அந்த அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம். அந்தவகையில், இந்திய அணி ஸ்டீவ் ஸ்மித்தை கட்டுப்படுத்த வேண்டும். ஸ்டீவ் ஸ்மித்தை அஷ்வினை வைத்து வீழ்த்தலாம் என்று யோசிக்கப்பட்டுவரும் நிலையில், அக்ஸர் படேல் தான் ஸ்மித்துக்கு எதிரான அஸ்திரம் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், ஸ்டீவ் ஸ்மித் கண்டிப்பாகவே ஆஸ்திரேலிய அணியின் லெஜண்ட் கிரிக்கெட்டர். அவர் இந்திய பவுலர்களை கடந்த காலங்களில் அடித்து நொறுக்கி நிறைய ஸ்கோர் செய்திருக்கிறார். அவர் பாட்டம் ஹேண்ட் பிளேயர் என்பதால் இந்திய பவுலர்களை, குறிப்பாக ஸ்பின்னர்களை திறம்பட எதிர்கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார். அவருக்கு எதிராக முறையான திட்டம் தேவை. 

ரோஹித் கேம்ப், கோலி கேம்ப்னு 2 கேங்கா பிரிந்த இந்திய அணி..! சாமர்த்தியமாக கையாண்ட சாஸ்திரி

ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்தியாவின் அஸ்திரம் என்று நான் நினைப்பது அக்ஸர் படேல் தான். ஸ்மித்துக்கு எதிராக அக்ஸர் நல்ல ரெக்கார்டை வைத்திருக்கிறார். அக்ஸர் படேல் அனைத்து டெஸ்ட்டிலும் ஆடும் பட்சத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார். அவரது லைன்&லெந்த், ஸ்டிரைட்டாக ஸ்டம்ப்புக்கு வீசும் பந்துகள், கண்டிப்பாக ஸ்மித் போல்டோ எல்பிடபிள்யுவோ ஆக வாய்ப்புள்ளது. ஏனெனில் அவர் பாட்டம் ஹேண்ட்டை(வலது கை பேட்ஸ்மேனுக்கு வலது கை பாட்டம் ஹேண்ட்) பயன்படுத்தி ஆடும் பேட்ஸ்மேன். எனவே ஸ்மித்துக்கு அக்ஸர் படேல் தான் பெரும் அச்சுறுத்தலாக திகழ்வார் என்று இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.
 

click me!