IND vs AUS: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன்..!

By karthikeyan VFirst Published Feb 4, 2023, 9:16 PM IST
Highlights

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.
 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. நாக்பூர், டெல்லி, தர்மசாலா மற்றும் அகமதாபாத்தில் 4 டெஸ்ட் போட்டிகள் நடக்கின்றன. வரும் 9ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் தொடங்குகிறது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணி ஃபைனலுக்கு தகுதிபெறுவது கிட்டத்தட்ட உறுதி. 2ம் இடத்தில் இருக்கும் இந்திய அணி அந்த இடத்தை தக்கவைத்து ஃபைனலுக்கு முன்னேற, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 அல்லது 3-1 அல்லது 2-0 அல்லது 2-1 என ஜெயிக்க வேண்டும். எனவே இது மிக முக்கியமான டெஸ்ட் தொடர் ஆகும்.

IND vs AUS: ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிரான இந்திய அணியின் அஸ்திரம் இவர் தான்..! இர்ஃபான் பதான் அதிரடி

2004ம் ஆண்டுக்கு பிறகு 19 ஆண்டுகள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி உள்ளது. இதற்கிடையே, ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவிடம் 2 முறை டெஸ்ட் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் உள்ளது. எனவே இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்குமே முக்கியமான தொடர்.

வரும் 9ம் தேதி நாக்பூரில் தொடங்கும் முதல் டெஸ்ட்டில் களமிறங்கும் ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை பார்ப்போம்.

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா ஆகிய இருவரும் தொடக்க வீரர்கள்.  3 மற்றும் 4ம் வரிசைகளில் இரு நட்சத்திர வீரர்களான லபுஷேன் மற்றும் ஸ்மித் ஆகிய இருவரும் ஆடுவார்கள். 5ம் வரிசையில் டிராவிஸ் ஹெட்டும், 6ம் வரிசையில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் ஆடுவார்கள். ஆல்ரவுண்டர் கேமரூன் க்ரீன் இடம்பெறுவார். ஸ்பின்னர்களாக நேதன் லயன் மற்றும் அஷ்டான் அகர் ஆகிய இருவரும், ஃபாஸ்ட் பவுலர்களாக கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும், ஸ்பின்னர்களாக நேதன் லயன் மற்றும் அஷ்டான்  அகர் ஆகிய இருவரும் ஆடுவார்கள்.

BBL: டைட்டில் வின்னர், ரன்னருக்கு பரிசுத்தொகை எவ்வளவு..? யார் யாருக்கு என்னென்ன அவார்ட்..? முழு விவரம்

ஆஸ்திரேலிய அணியின் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷன்:

டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), நேதன் லயன், அஷ்டான் அகர், மிட்செல் ஸ்டார்க்.

click me!