உலகக் கோப்பையின் 41ஆவது லீக் போட்டியில் இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதைத் தொடர்ந்து அரையிறுதியில் இந்தியாவுடன் விளையாடுவது என்பது சவால் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியுள்ளார்.
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முக்கியமான போட்டி தற்போது பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், அதிகபட்சமாக குசால் பெர்ரேரா 51 ரன்கள் எடுத்தார்.
கடைசியாக, மகீஷ் தீக்ஷனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா இருவரும் 14 ஓவர்கள் வரையில் நிதானமாக நின்று விளையாடினர். இதில், 10ஆவது விக்கெட்டிற்கு தீக்ஷனா மற்றும் மதுஷங்கா இருவரும் 87 பந்துகள் பிடித்து 43 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலமாக இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில், ஒரு பவுலராக தீக்ஷனா 38 ரன்கள் எடுத்து இலங்கை அணிக்கு கை கொடுத்தார்.
இன்னும் முழுசா அரையிறுதிக்கு தகுதி பெறாத நியூசிலாந்து; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்காக வெயிட்டிங்!
பின்னர் எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே 45 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 42 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கேன் வில்லியம்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, மார்க் சேப்மேன் 7 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன் பிறகு டேரில் மிட்செல் 43 ரன்களில் ஆட்டமிழக்கவே, கிளென் பிலிப்ஸ் மற்றும் டாம் லாதம் இருவரும் நியூசிலாந்து அணியை வெற்றி பெறச் செய்தனர். இறுதியாக நியூசிலாந்து 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4ஆவது இடத்தில் நீடிக்கிறது. கிட்டத்தட்ட அரையிறுதிக்கு நெருங்கிவிட்டது. போட்டிக்கு பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியிருப்பதாவது: சிறப்பான ஒரு போட்டியாக இருந்தது. குசால் பெரேரா சிறப்பாக விளையாடினார். மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்தது. எங்களது பவுலர்கள் சிறப்பாக விளையாடி விக்கெட்டுகளை எடுத்தார்கள். வானிலை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
பொறுப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் – 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி வெற்றி!
ஒரு சில அணிகள் ஒரே புள்ளிகளில் முடிவடையும். எனினும், இது ரன் ரேட் அடிப்படையில் முடியும். எனினும், எங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்று நம்புகிறோம். அரையிறுதிப் போட்டிக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும். இந்தியாவுடன் அரையிறுதிப் போட்டியில் விளையாடுவது என்பது சவாலாக இருக்கும். அது ஒரு அணியாக எங்களை சோதிக்கும் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.