இலங்கைக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
இந்தியா நடத்தும் 13ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து 4 ஆவது இடத்திற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டியிட்டன.
இன்னும் முழுசா அரையிறுதிக்கு தகுதி பெறாத நியூசிலாந்து; பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்காக வெயிட்டிங்!
இதில், இன்று நடந்த இலங்கைக்கு எதிரான 41ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியானது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலமாக 10 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. மேலும், ரன் ரேட்டில் 0.743 என்று பெற்றுள்ளது. இதன் மூலமாக நியூசிலாந்து அணியானது அரையிறுதிக்கு நெருங்கிவிட்டது. எனினும், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இந்த ரேஸில் உள்ள நிலையில், அரையிறுதி வாய்ப்புக்கு இந்த இரு அணிகளும் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
வரும் 11 ஆம் தேதி இங்கிலாந்திற்கு எதிரான 44ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியானது முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டும். இதில், 287 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வேண்டும். ஒருவேளை 2ஆவதாக பேட்டிங் செய்தால் முதலில் 13 ரன்களுக்கு இங்கிலாந்தை ஆல் அவுட் செய்ய வேண்டும். இல்லையென்றால் இங்கிலாந்து அடிக்கும் ரன்களை 3 ஓவர்களுக்குள் அடித்து வெற்றி பெற வேண்டும். இதெல்லாம் நடந்தால் மட்டுமே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
பொறுப்பாக விளையாடிய ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல் – 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி வெற்றி!
இதற்கு முன்னதாக நடந்த உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணியானது, 4 முறை (1979, 1983, 1987, 2011) மட்டுமே அரையிறுதிக்கு வந்துள்ளது. மேலும், 1992 ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் முதல் முறையாக சாம்பியனானது. இதையடுத்து, 1996 ஆம் ஆண்டு வாசீம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி காலிறுதிப் போட்டியுடன் வெளியேறியது.
கடந்த 1999 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து 2ஆவது இடம் பிடித்தது. கடந்த 2015 ஆம் ஆண்டு காலிறுதிப் போட்டியுடன் வெளியேறியது. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜ் உடன் வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
NZ vs SL: நியூசிலாந்தின் பொறுமையை சோதித்த தீக்ஷனா – மதுஷங்கா: கடைசில இலங்கை 171க்கு ஆல் அவுட்!