பின்ச் அதிரடி வீண்: 5ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பெர்த் அணி!

Published : Jan 01, 2023, 12:25 PM IST
பின்ச் அதிரடி வீண்: 5ஆவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த பெர்த் அணி!

சுருக்கம்

மெல்பர்ன் அணிக்கு எதிரான போட்டியில் பெர்த் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் மெல்பர்ன் ரெனெகேட்ஸ் அணியும், பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற மெல்பர்ன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, தொடக்க வீரர்கள் குப்தில், மேடிசன், ஹேண்ட்ஸ்கோம் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய பின்ச் 48 பந்துகளில் 2 சிக்சர்கள் 6 பவுண்டரிகள் உள்பட 65 ரன்கள் எடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியாக மெல்பர்ன் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.

மகளுடன் புத்தாண்டை கொண்டாடிய எம் எஸ் தோனி: வைரலாகும் வீடியோ!

இதையடுத்து, 156 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி ஆடியது. இதில் பாப் டூ பிளசிஸ் 39 ரன்களும், கேமரூன் பான்க்ராஃப்ட் 46 ரன்களும், ஜோஸ் இங்க்லிஸ் 47 ரன்களும் எடுக்க 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 5 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அழகான 2022 ஆம் ஆண்டு நினைவுகளுக்கு நன்றி - ஷிகர் தவான்!

பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணியில் இங்க்லிஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பெர்த் ஸ்கார்ச்செர்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியுற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சிட்னி தண்டர்ஸ் அணி 7 போட்டிகளில் பங்கேற்று 4ல் வெற்றியும், 3ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடம் பிடித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

சிட்னி சிக்சர்ஸ் அணி 6 போட்டியில் விளையாடி 4ல் வெற்றியும் 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம் பிடித்துள்ளது. பிரிஸ்பேட் ஹீட் அணி 5 போட்டிகளில் விளையாடி ஒரேயொரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடம் பிடித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

IND vs SA: மாஸ் காட்டும் பாண்டியா.. 3வது T20யில் படைக்கப்போகும் புதிய சாதனை
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் விளையாடும் விராட் கோலி..! ரசிகர்களுக்கு குட் நியூஸ்!