ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த விக்கெட் கீப்பர் யார்?

By Rsiva kumarFirst Published Jan 1, 2023, 9:55 AM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கு இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக இஷான் கிஷான் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

டி20 போட்டிகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 3 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி மும்பையில் தொடங்குகிறது. 5ஆம் தேதி 2ஆவது டி20 போட்டி புனேயில் தொடங்குகிறது. 7 ஆம் தேதி ராஜ்கோட்டில் 3ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நடக்கிறது.

அழகான 2022 ஆம் ஆண்டு நினைவுகளுக்கு நன்றி - ஷிகர் தவான்!

இதைத் தொடர்ந்து வரும் 10 ஆம் தேதி கவுகாத்தியில் முதல் ஒரு நாள் போட்டி நடக்கிறது. 12 ஆம் தேதி கொல்கத்தாவில் 2ஆவது ஒரு நாள் போட்டி நடக்கிறது. 15 ஆம் தேதி திருவனந்தபுரத்தில் 3ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நடக்கிறது. இதையடுத்து, வரும் பிப்ரவரி மாதம் இந்தியா வரும் ஆஸ்திரேலியா தொடரில் கார் விபத்தில் பலத்த காயமடைந்த ரிஷப் பண்ட் விளையாடமாட்டார். மேல் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையிலிருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறைந்தது ஒரு வருட காலம் வரையில் ரிஷப் பண்ட் ஓய்வில் இருக்க வேண்டும் என்று தெரிகிறது.

ரிஷப் பண்ட் மூளை & முதுகுத்தண்டு MRI ஸ்கேன் ரிப்போர்ட்..! எந்த பிரச்னையும் இல்லை.. ரசிகர்கள் நிம்மதி

இதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா தொடரிலும், ஐபிஎல் சீசனிலும் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. அவருக்குப் பதிலாக வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 210 ரன்கள் குவித்த இஷான் கிஷானுக்கு வாய்ப்புகள் வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இவரைத் தொடர்ந்து கே எஸ் பரத், உபேந்திர யாதவ் ஆகியோரது பெயரும் அடிபடுகிறது. எனினும், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் சீசனில் மவுசை கூட்டிய பந்து வீச்சாளர்கள் யார் யார் தெரியுமா?

click me!