இன்னும் 3 தான் பாக்கி: 2023 நியூ இயரில் சாதிக்க காத்திருக்கும் ரஷீத் கான்!

Published : Dec 31, 2022, 10:32 PM IST
இன்னும் 3 தான் பாக்கி: 2023 நியூ இயரில் சாதிக்க காத்திருக்கும் ரஷீத் கான்!

சுருக்கம்

பிக்பேஷ் டி20 லீக் தொடரில் இன்னும் 3 விக்கெட்டுகள் மட்டும் எடுத்தால் ரஷீத் கான் பிக்பேஷ் சீசனில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று மெல்பர்ன் ஸ்டார்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் டாஸ் வென்ற மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மெல்பர்ன் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. இதில், ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 35 பந்துகளில் 6 சிக்சர்கள் 5 பவுண்டரிகள் உள்பட 74 ரன்கள் எடுத்தார்.

BBL: மார்கஸ் ஸ்டோய்னிஸ் காட்டடி பேட்டிங்.. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸை வீழ்த்தி மெல்பர்ன் ஸ்டார்ஸ் அபார வெற்றி

பந்து வீச்சில் அகர் மட்டும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஹென்ரி தார்ண்டான் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ரஷீத் கான் விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை. இதையடுத்து 187 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி களமிறங்கியது. இந்த அணியில் ஹென்ரி ஹண்ட் 49 ரன்களும், ஆடம் ஹோஸ் 56 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 20 ஓவர்கள் முடிவில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

2022 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் பாபர் அசாம் நம்பர் 1 இடம்!

வரும் ஜனவரி 2 ஆம் தேதி அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கும், ஹோபர்ட் ஹரிஹேன்ஸ் அணிக்கும் இடையிலான 26 ஆவது போட்டி நடக்கிறது. இந்தப் போட்டியில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வீரர் ரஷீத் கான் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினால் பிக்பேஷ் டி20 லீக் தொடரில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

2022 ஆம் ஆண்டில் நம்பர் 1 இடம்: டி20 போட்டிகளில் கில்லாடி சூர்யகுமார் யாதவ்!

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பிக்பேஷ் லீக் தொடரில் அறிமுகமானது முதல் அடிலெய்ட் அணிக்காக விளையாடி வருகிறார். புத்தாண்டில் 100 ஆவது விக்கெட்டை கைப்பற்றினால் அதை விட சந்தோஷம் எனக்கு வேறு ஒன்றும் இல்லை. இன்னும் 3 விக்கெட்டுகள் கைப்பற்றுவது கனவை விட பெரிதாக தெரிகிறது. 3 விக்கெட்டுகள் கைப்பற்றி 100 விக்கெட்டுகள் சாதனையை படைப்பேன் என்ற நம்பிக்கை உள்ளதாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 'கன்னி' அரைசதத்தில் உலக சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி! இந்தியா மாஸ் வெற்றி!
IND vs ZIM: 149 கி.மீ வேகம்.. கம்பேக் மேட்ச்சில் மரண மாஸ் காட்டிய மயங்க் யாதவ்.. வரலாற்று சாதனை!