2022 ஆம் ஆண்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் பாபர் அசாம் நம்பர் 1 இடம்!

By Rsiva kumarFirst Published Dec 31, 2022, 8:28 PM IST
Highlights

கடந்த 2022 ஆம் ஆண்டில் நடந்த ஒரு நாள் போட்டி, டி20 போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என்று அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.
 

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. 7 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-3 என்ற கணக்கில் கைப்பற்றியது இங்கிலாந்து. டெஸ்ட் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி பாகிஸ்தான் அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

2022 ஆம் ஆண்டில் நம்பர் 1 இடம்: டி20 போட்டிகளில் கில்லாடி சூர்யகுமார் யாதவ்!

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்தது. இதில் கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 612 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து அணியின் லாதம் 113 ரன்களும், வில்லியம்சம் 200 ரன்களும் குவித்தனர். இதைத் தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 311 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 137 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸை ஆடியது. ஆனால், 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முடிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து, 2 அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 2 ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது.

2022 ஆம் ஆண்டில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்: பிசிசிஐ ரிப்போர்ட்!

முதல் போட்டி முடிந்து தற்போது ஓய்வில் இருக்கும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது ஓய்வு நேரத்தை நன்றாக இயற்கையோடு செலவிட்டு வருகிறார். இந்த நிலையில், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகள் என்று அனைத்து போட்டிகளிலும் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். அனைத்து பார்மேட்டுகளிலும் மொத்தமாக 2598 ரன்கள் எடுத்துள்ளார். லிட்டன் தாஸ் 1921 ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 1609 ரன்களும், முகமது ரிஸ்வான் 1598 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 1560 ரன்களும் எடுத்துள்ளனர்.

ஷ்ரேயாஸ் ஐயர் நம்பர் 1: அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் சரிவடைந்த விராட் கோலி!

2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர் பட்டியலில் பேட் கம்மின்ஸ் நம்பர் ஒன் இடம் பிடித்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை டெஸ்ட் போட்டிகளில் பந்து வீச்சில் பேட் கம்மின்ஸ் தான் சிறந்து விளங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காயம் ரொம்ப சாஸ்தி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான்!

click me!