ஆசிய கோப்பை விவகாரம்.. பிசிசிஐக்கு கெடு விதித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி

By karthikeyan VFirst Published Feb 7, 2023, 2:58 PM IST
Highlights

பாகிஸ்தானில் நடக்கும் ஆசிய கோப்பையில் இந்திய அணி ஆடுமா இல்லையா என்பது குறித்து அடுத்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங்கிற்கு முன் பிசிசிஐ உறுதிப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளார்.
 

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பரஸ்பர இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே மோதுகின்றன. ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, ஆசிய கோப்பை ஆகிய ஐசிசி தொடர்களில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்த ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானிலும், ஒருநாள் உலக கோப்பை இந்தியாவிலும் நடக்கவுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க முடியாது. இந்திய அரசாங்கம் தான் முடிவு எடுக்கும். அதன்படிதான் பிசிசிஐ செயல்பட முடியும். இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதிக்காது என்பதால், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது. ஆசிய கோப்பை தொடர் பொதுவான இடத்தில் நடத்தப்படும் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 ஓபனிங் பார்ட்னர்ஷிப்..! டாப் 5ல் 2 இந்திய ஜோடிகள்

ஜெய் ஷாவின் கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அதிருப்திக்குள்ளாக்கியது. ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை தங்களிடம் இருக்கும்போது, ஜெய் ஷா தன்னிச்சையாக பேசியதற்கு பாக்., கிரிக்கெட் வாரியம் கண்டனம் தெரிவித்ததுடன், எக்காரணத்தை முன்னிட்டும் ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை விட்டுத்தரமுடியாது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு வர விரும்பவில்லை என்றால், ஆசிய கோப்பையில் ஆடாமல் இருக்கட்டும். இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தானும் கலந்துகொள்ளாது என்று பாக்., கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க, அண்மையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங் பஹ்ரைனில் நடந்தது. இந்த கூட்டத்திலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. மார்ச் மாதம் மீண்டும் இதுகுறித்து விவாதிக்கப்படவுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மீட்டிங்கில் பாக்., கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேதி சில விஷயங்களை ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் உறுதிபட தெரிவித்துவிட்டார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய சந்தர்பால்..! பிராத்வெயிட் - சந்தர்பால் ஜோடி சாதனை

இந்திய அணிக்கு தேவையான பாதுகாப்பை அளிக்க பாகிஸ்தான் அரசு தயாராகவுள்ளது. எனவே இந்திய அணியை பாகிச்தானுக்கு அனுப்பாமல் இருக்க பிசிசிஐயிடம் எந்த காரணமும் இல்லை. பாகிஸ்தானுக்கு வந்து ஆசிய கோப்பையில் ஆட இந்திய அரசிடம் பிசிசிஐ அனுமதி பெறாவிட்டால், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் பாகிஸ்தான் ஆடாது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் அடுத்த ஆலோசனைக் கூட்டத்திற்கு முன்பாக, இந்திய அரசிடம் பேசி பிசிசிஐ அதன் நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்கவேண்டும் என்று நஜாம் சேதி திட்டவட்டமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்துள்ளார்.
 

click me!