மகளிர் டி20 உலக கோப்பை: பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது இந்தியா

By karthikeyan VFirst Published Feb 6, 2023, 10:31 PM IST
Highlights

மகளிர் டி20 உலக கோப்பை பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
 

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் வரும் 10ம் தேதி முதல் 26 வரை தென்னாப்பிரிக்காவில் நடக்கிறது. இன்று மற்றும் 8ம் தேதி பயிற்சி போட்டிகள் நடக்கின்றன. இன்று கேப்டவுனில் நடந்த பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட்டிங் ஆடியது.

இந்திய மகளிர் அணி:

ஸ்மிரிதி மந்தனா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஷிகா பாண்டே, ராஜேஷ்வரி கெய்க்வாட், தேவிகா வைத்யா, பூஜா  வஸ்ட்ராகர், ராதா யாதவ், ஹர்லீன் தியோல், ரேணுகா சிங், அஞ்சலி சர்வானி, யாஸ்டிகா பாட்டியா (விக்கெட் கீப்பர்).

டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 ஓபனிங் பார்ட்னர்ஷிப்..! டாப் 5ல் 2 இந்திய ஜோடிகள்

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய மகளிர் அணியை 20 ஓவரில் வெறும் 129 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனை பெத் மூனி 28 ரன்கள் அடித்தார். கார்ட்னெர் 22 ரன்கள் அடித்தார். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்கத்துக்கு ஆட்டமிழக்க, 79 ரன்களுக்கே ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் பின்வரிசையில் இறங்கிய வாரெஹாம் 32 ரன்களும், ஜோனாசென் 22 ரன்களும் அடிக்க 20 ஓவரில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 129 ரன்கள் மட்டுமே அடித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய சந்தர்பால்..! பிராத்வெயிட் - சந்தர்பால் ஜோடி சாதனை

130 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸ்(0), ஷஃபாலி வெர்மா (2), ஸ்மிரிதி மந்தனா (0) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். அதிகபட்சமாகவே தீப்தி ஷர்மா 19 ரன்கள் தான் அடித்தார். ஹர்லீன் தியோல் 12 ரன்கள் அடித்தார். அனைத்து வீராங்கனைகளுமே சொதப்ப, வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 44 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.
 

click me!