டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 ஓபனிங் பார்ட்னர்ஷிப்..! டாப் 5ல் 2 இந்திய ஜோடிகள்

By karthikeyan VFirst Published Feb 6, 2023, 9:12 PM IST
Highlights

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸின் தொடக்க வீரர்கள் கிரைக் பிராத்வெயிட் - தேஜ்நரைன் சந்தர்பால் முதல் விக்கெட்டுக்கு 336 ரன்களை குவித்து, டெஸ்ட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் டாப் 5 ஓபனிங் பார்ட்னர்ஷிப் ஸ்கோர்களை பார்ப்போம்.
 

வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டி நடந்துவரும் நிலையில், இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 447 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்கள் கிரைக் பிராத்வெயிட் - தேஜ்நரைன் சந்தர்பால் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 336 ரன்களை குவித்தனர். இருவருமே சதமடித்தனர். 182 ரன்களுக்கு ஆட்டமிழந்து பிராத்வெயிட் இரட்டை சதத்தை தவறவிட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசிய தேஜ்நரைன் சந்தர்பால் முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றி சாதனை படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தையே இரட்டை சதமாக மாற்றிய சந்தர்பால்..! பிராத்வெயிட் - சந்தர்பால் ஜோடி சாதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸுக்கு முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்து கொடுத்த ஜோடி என்ற சாதனையை பிராத்வெயிட் - சந்தர்பால் ஜோடி படைத்தது.  இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் விக்கெட்டுக்கு அதிக ரன்களை குவித்த டாப் 5 ஜோடிகளை பார்ப்போம். 

1. கிரேம் ஸ்மித் - நீல் மெக்கென்ஸி (தென்னாப்பிரிக்கா)

2008ல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் தொடக்க வீரர்களான கிரேம் ஸ்மித் - நீல் மெக்கென்ஸி இணைந்து முதல் விக்கெட்டுக்கு 415 ரன்களை குவித்ததுதான் இன்றளவும் சாதனையாக இருந்துவருகிறது. அந்த போட்டியில் ஸ்மித் 232 ரன்களையும், மெக்கென்ஸி 226 ரன்களையும் குவித்தனர்.

2. வினூ மன்கத் - பங்கஜ் ராய் (இந்தியா)

1956ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் இந்தியாவின் வினூ மன்கத் மற்றும் பங்கஜ் ராய் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 413 ரன்களை குவித்தனர். அதுதான் 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக உள்ளது. அந்த போட்டியில் வினூ மன்கத் 231 ரன்களையும், பங்கஜ் ராய் 173 ரன்களையும் குவித்தனர்.

3. வீரேந்திர சேவாக் - ராகுல் டிராவிட் (இந்தியா)

2006ல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இறங்கிய ராகுல் டிராவிட் - வீரேந்திர சேவாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 410 ரன்களை குவித்தனர். 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடரை எந்த அணி வெல்லும்..? மஹேலா ஜெயவர்தனே ஆருடம்

4. க்ளென் டர்னர் - டெரி ஜார்விஸ் (நியூசிலாந்து)

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 1972ல் நடந்த டெஸ்ட்டில் நியூசிலாந்து தொடக்க வீரர்கள் க்ளென் டர்னர் - டெரி ஜார்விஸ் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 387 ரன்களை குவித்தது, இந்த பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.

5. பாப் சிம்ப்சன் - பில் லாரி (ஆஸ்திரேலியா)

1965ல் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பாப் சிம்பசன் - பில் லாரி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 382 ரன்களை குவித்தது இந்த பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.
 

click me!