நடையை கட்டிய மும்பை இந்தியன்ஸ் கேடவுன்: நம்பர் 2 இடத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்!

By Rsiva kumar  |  First Published Feb 7, 2023, 10:04 AM IST

எஸ்ஏ20 எனப்படும் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.


தென் ஆப்பிரிக்கா டி20 லீக் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. பிரிட்டோரியா கேபிடள்ஸ், ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. இதையடுத்து 4ஆவது இடத்திற்கான போட்டியில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி, ஜோபர்க் சூப்பர் கிங்ஸை எதிர்கொண்டது. ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

CCL 2023: சென்னை அணியில் இணைந்த விஷ்ணு விஷால் - விக்ராந்த் கூட்டணி: ஆர்யா தான் கேப்டன்!

Tap to resize

Latest Videos

undefined

மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணி:

ராசி வாண்டர்டசன், வெஸ்லி மார்ஷல், கிராண்ட் ராயலோஃப்சென் (விக்கெட் கீப்பர்), டிவால்ட் பிரெவிஸ், ஜார்ஜ் லிண்டே, டிம் டேவிட், டிலானோ பாட்ஜியடெர், சாம் கரன், ரஷீத் கான் (கேப்டன்), ககிசோ ரபாடா, ஜோஃப்ரா ஆர்ச்சர்.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், லியஸ் டு ப்ளூய், சிபானெலோ மகன்யா, மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), டோனவான் ஃபெரைரா, ரொமாரியோ ஷெஃபெர்ட், ஜெரால்ட் கோயட்ஸீ, கைல் சிம்மண்ட்ஸ், லிஸாட் வில்லியம்ஸ், மஹீஷ் தீக்‌ஷனா.

3 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் சிசிஎல்: தொடரில் பங்கேற்கும் அணி மற்றும் போட்டி அட்டவணை!

அதன்படி முதலில் ஆடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் குவித்தது. ஏற்கனவே புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தனக்கு எந்த கவலையும் இல்லை என்பதற்கேற்ப அதிரடி காட்டியது. தொடக்க வீரர்கள் இருவரும் டக் அவுட்டில் வெளியேற 3ஆவதாக வந்த ஹென்றிக்ஸ் 48 பந்துகளில் ஒரு சிக்சர் 11 பவுண்டரிகள் உள்பட 81 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். வாடே 18 பந்துகளில் ஒரு சிக்சர் 8 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் 189 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணிக்கு தொடக்க முதலே அதிர்ச்சி தான். ரசீவ் வாண்டர் டூசென் 20 ரன்களிலும், மார்செல் 4 ரன்னிலும், பிரேவிஸ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன் பிறகு வந்த பின் வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Shikhar Dhawan Divorce Case: யாராக இருந்தாலும் இதை செய்யக் கூடாது: தவானின் மனைவிக்கு டெல்லி நீதிமன்றம் அதிரடி

இதே போன்று டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறியது. இன்று நடக்கும் போட்டியில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பிரிட்டோரியா கேபிடல்ஸ் அணியும், 4ஆவது இடத்தில் இருக்கும் பார்ல் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு 4ஆவது அணியாக தகுதி பெற்றுள்ள நிலையில், இந்தப் போட்டியில் பார்ல் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றால் 3ஆவது இடம் பிடிக்கும். ஏற்கனவே 3ஆவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 4ஆவது இடம் பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!