Pakistan vs Australia: 2 அணிகளுமே செம பேட்டிங்.. முதல் டெஸ்ட் டிரா

Published : Mar 08, 2022, 05:50 PM IST
Pakistan vs Australia: 2 அணிகளுமே செம பேட்டிங்.. முதல் டெஸ்ட் டிரா

சுருக்கம்

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.  

ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 4ம் தேதி தொடங்கி நடந்தது. 

முதல் இன்னிங்ஸ்:

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியின் இமாம் உல் ஹக் மற்றும் அசார் அலி ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தனர். இமாம் உல் ஹக் 157 ரன்களையும், அசார் அலி 185 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அபாரமான பேட்டிங்கால், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது பாகிஸ்தான் அணி.

இதையும் படிங்க - வார்ன் பெஸ்ட் ஸ்பின்னர் இல்லனு நான் சொன்னது என் நேர்மையான கருத்து; சொன்ன நேரம் தான் தவறானது! கவாஸ்கர் விளக்கம்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி வீரர்களும் அபாரமாக பேட்டிங் ஆடினார்கள். தொடக்க வீரர்கள் உஸ்மான் கவாஜா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 156 ரன்களை குவித்தனர். அரைசதம் அடித்த வார்னர் 68 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 97 ரன்களை குவித்த உஸ்மான் கவாஜா 97 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி அவர்களும் அரைசதம் அடித்தனர். லபுஷேன் 78 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஸ்மித் 90 ரன்களுக்கு ஆட்டமிழந்து 10 ரன்னில் சதத்தை தவறவிட்டார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 459 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணி கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் முதல் இன்னிங்ஸையே முடித்தது.

இதையும் படிங்க - இந்தியாவில் 175 அடிச்சும் நோ யூஸ்..! ஜடேஜாவின் பேட்டிங் குறித்து கம்பீர் அதிரடி

போட்டி டிரா:

அதன்பின்னர் கடைசி நாளில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 252 ரன்கள் அடிக்க, 5ம் நாள் ஆட்டம் முடிந்தது. அதனால் போட்டி டிராவில் முடிந்தது. 2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் அப்துல்லா ஷாஃபிக் (136) மற்றும் இமாம் உல் ஹக் (111) ஆகிய இருவருமே சதமடித்தனர். இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்த இமாம் உல் ஹக் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
 

PREV
click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?