பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேற 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இந்தியாவில் நடந்து வந்த 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. 4ஆவது இடத்திற்கான ரேஸில் நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இருந்தன. இதில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் தோற்றதன் மூலமாக அரையிறுதி வாய்ப்பை இழந்தது.
பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் அதிரடியால் இங்கிலாந்து 337 ரன்கள் குவிப்பு!
இந்த நிலையில் தான் இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்தால் மட்டுமே பாகிஸ்தானின் அரையிறுதி வாய்ப்பு நிறைவேறும். இல்லையென்றால், நியூசிலாந்து தான் அரையிறுதிக்கு முன்னேறும். மேலும், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் 15ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டியில் மோதும்.
ஒரு மில்லியன் ரசிகர்கள்: அதிக ரசிகர்கள் வருகை என்ற சாதனையை நோக்கி 2023 உலகக் கோப்பை!
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தற்போது நடந்து வரும் போட்டியில் முதலில் டாஸ் வென்று ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்தது. இதில் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 84 ரன்கள் சேர்த்தார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றால் 2025ஆம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.