ஒரு மில்லியன் ரசிகர்கள்: அதிக ரசிகர்கள் வருகை என்ற சாதனையை நோக்கி 2023 உலகக் கோப்பை!

By Rsiva kumar  |  First Published Nov 11, 2023, 4:55 PM IST

2023 உலகக் கோப்பையில் ஒரு மில்லியன் ரசிகர்கள் மைதானத்திற்கு வந்து போட்டிகளை கண்டு ரசித்துள்ளதாக ஐசிசி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


இந்தியாவில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி முதல் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இடம் பெற்ற 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 9 போட்டிகள் வீதம் மொத்தமாக 45 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளன. நாளை நடக்கும் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலமாக லீக் போட்டி முடிவடைகிறது.

ENG vs PAK: இங்கிலாந்து 300 எடுத்தால் பாகிஸ்தான் 6.1 ஓவர்களில் வெற்றி பெற வேண்டும் – இங்கிலாந்து பேட்டிங்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடக்கிறது. இதில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தகுதி பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் நியூசிலாந்து, பாகிஸ்தானின் வெற்றி, தோல்விக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு – ஸ்கோர்போர்டில் காட்டப்பட்ட 11.11.11, 11.11. 111 ரன்கள் தேவை!

இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வேண்டும். உதாரணமாக இங்கிலாந்து 300 ரன்கள் எடுத்தால், பாகிஸ்தான்6.1 ஓவர்களில் அந்த ஸ்கோரை எடுத்து வெற்றி பெற வேண்டும். ஆனால், இது சாத்தயமில்லை என்று தெரிகிறது. ஆதலால், நியூசிலாந்து அணி தான் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். இதன் மூலமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதும். இந்தப் போட்டி வரும் 14 ஆம் தேதி மும்பையில் நடக்கிறது.

துபாயில் நடந்த முதல் ஆசிய அரை மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை!

இந்த நிலையில் தான் நேற்று நடந்த தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலமாக இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை 10 லட்சம் பேர் (ஒரு மில்லியன் ரசிகர்கள்) கண்டு ரசித்துள்ளர் என்று ஐசிசி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. எஞ்சிய 6 போட்டிகளில் இதனுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும்.

அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை – டி20 உலகக் கோப்பை சிக்ஸர் குறித்து மனம் திறந்த கோலி!

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது: இந்த உலகக் கோப்பையை எப்போதும் சிறந்ததாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது, முந்தைய சாதனைகளை முறியடித்ததில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மெகா நிகழ்வின் முன்னோடியாக அயராது உழைத்த எங்கள் அன்பான ரசிகர்கள், மாநில சங்கங்கள் மற்றும் ஒவ்வொரு பங்குதாரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நாங்கள் இப்போது முக்கியமான வீட்டு நீட்டிப்பை அணுகும்போது, ​​நாங்கள் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.

Sri Lanka Cricket Board: இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சஸ்பெண்ட் செய்து ஐசிசி அதிரடி அறிவிப்பு!

கடந்த 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டை 6 லட்சம் ரசிகர்கள் கண்டு ரசித்துளளனர். 2011 ஆம் ஆண்டு 1.23 மில்லியன் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதே போன்று 2015 ஆம் ஆண்டு 1.01 மில்லியனும், 2019 ஆம் ஆண்டு 7,52,000 ரசிகர்களும் கண்டு ரசித்துள்ளனர். தற்போது 2023 உலகக் கோப்பை தொடரை 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Another milestone achieved at 😍

More 👉 https://t.co/qdnaQ3oTkQ pic.twitter.com/SLAQT0Gubw

— ICC (@ICC)

 

Total attendance at ODI Men's Cricket World Cups in the 21st century:

• 626,845 : 2003, 🇿🇦
• 672,000 : 2007, West Indies
• 1.23 million : 2011, 🇮🇳
• 1.01 million : 2015, 🇦🇺 & 🇳🇿
• 752,000 : 2019, 🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 & 🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿
• 1 million*+ : 2023, 🇮🇳 (6 matches still to go)

— Zucker Doctor (@DoctorLFC)

 

click me!