பாகிஸ்தானிற்கு எதிரான உலகக் கோப்பையின் 44ஆவது லீக் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 337 ரன்கள் குவித்துள்ளது.
உலகக் கோப்பையின் 44ஆவது லீக் போட்டி புனே மைதானத்தில் நடக்கிறது. இதில், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி, ஜானி பேர்ஸ்டோவ் மற்றும் டேவிட் மலான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
ஒரு மில்லியன் ரசிகர்கள்: அதிக ரசிகர்கள் வருகை என்ற சாதனையை நோக்கி 2023 உலகக் கோப்பை!
இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 82 ரன்கள் குவித்தது. மலான் 31 ரன்கள் எடுத்து இப்திகார் அகமது பந்தில் முகமது ரிஸ்வானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜோ ரூட் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஜானி பேர்ஸ்டோவ் அரைசதம் அடித்த நிலையில், 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று ஜோ ரூட்டும் அரைசதம் அடித்து 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
கடந்த போட்டியில் சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் இந்தப் போட்டியில் 84 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இதில், 11 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். அதன் பிறகு வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் 27 ரனகள் எடுத்த நிலையில், ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். ஹாரி ப்ரூக் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். கடைசியா கிறிஸ் வோக்ஸ் 4 ரன்களில் வெளியேற, டேவிட் வில்லி 15 ரன்கள் சேர்க்கவே இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் குவித்தது.
வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வு – ஸ்கோர்போர்டில் காட்டப்பட்ட 11.11.11, 11.11. 111 ரன்கள் தேவை!
பவுலிங்கைப் பொறுத்த வரையில் பாகிஸ்தான் அணியில் ஹரீஷ் ராஃப் 3 விக்கெட்டுகளும், ஷாகீன் அஃப்ரிடி மற்றும் முகமது வசீம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இப்திகார் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பிற்குள் செல்ல 6.4 ஓவர்களில் 337 ரன்களை சேஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால், இந்த தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேறும் நிலை ஏற்படும். மேலும், பாகிஸ்தான் 6.4 ஓவர்களில் சேஸ் செய்யாவிட்டால் நியூசிலாந்து அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாயில் நடந்த முதல் ஆசிய அரை மராத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை!