பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சல்மான் பட், ஆசிய கோப்பை அட்டவணையை விமர்சித்ததோடு இல்லாமல், நியாயமான போட்டி மற்றும் வீரர்களுக்கு ஏற்ற வகையில் அட்டவணை இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
முதல் முறையாக பாகிஸ்தான் மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் ஆசிய கோப்பை 2023 தொடருக்கான அட்டவணை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதன்படி வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17 ஆம் தேதி வரையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை மற்றும் நேபாள் ஆகிய 6 அணிகள் மோதுகின்றன.
500ஆவது போட்டி: அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனை படைத்த விராட் கோலி!
இதில், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம் பெற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோதும். முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா முதல் நாளில் 288 ரன்கள் குவிப்பு; ரோகித் சர்மா 80, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57!
இதனால் சூப்பர் 4 சுற்றிலும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடும் வாய்ப்பு உருவாகியுள்ளது. அப்படி இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறினால், செப்.10 ஆம் தேதி மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்க வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் இரு அணிகளும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் பட்சத்தில் செப்.17ஆம் தேதி நடக்கும் போட்டியிலும் மீண்டும் மோதுவதற்கான வாய்ப்புகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 100ஆவது டெஸ்ட் போட்டி: நினைவு பரிசு வழங்கிய பிரையன் லாரா!
இந்த நிலையில், ஆசிய கோப்பை 2023 தொடருக்கான அட்டவணையை விமர்சித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாது: பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துகின்றன. இரு நாடுகள் இணைந்து ஆசிய கோப்பை தொடரை நடத்துவது இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக ஒரே நாடு தான் ஆசிய கோப்பை தொடரை நடத்தியுள்ளது.
முகேஷ் குமாரை வைத்து டெஸ்ட் செய்ய தயாரான டீம் இந்தியா; வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்!
அதுமட்டுமின்றி இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் இலங்கையில் விளையாடுகிறது. பாகிஸ்தான் தனது முதல் போட்டியில் நேபாள் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தானில் உள்ள முல்தான் பகுதியில் நடக்கிறது. இதையடுத்து பாகிஸ்தான் தனது 2ஆவது போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இலங்கையில் நடக்கிறது. 2 நாட்கள் இடைவெளியில் பாகிஸ்தானிலிருந்து, இலங்கைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது.
செப்டம்பர் 2ல் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!
சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றால் மீண்டும் பாகிஸ்தானிற்கு வர வேண்டும். இதன் காரணமாக ஆசிய கோப்பை அட்டவணையை விமர்சித்துள்ளார். அதாவது, இலங்கையில் நடக்கும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு எதிரான போட்டிக்கு குறைந்த 4 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். ஏனென்றால், இலங்கை தனது முதல் போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இலங்கையில் கண்டியில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நடக்கிறது. அதன் பிறகு செப்டம்பர் 5ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி பாகிஸ்தானில் லாகூரில் நடக்கிறது. இலங்கை விளையாடும் முதல் மற்றும் 2ஆவது போட்டிக்கு 4 நாட்கள் இடைவெளி உள்ளது.
ஆசிய கோப்பை 2023: கேஎல் ராகுல் இடம் பெற வாய்ப்பில்லை?
ஆனால், இதில், உண்மையிலேயே ஆசிய கோப்பை தொடரை நடத்துவது என்னவோ பாகிஸ்தான் தான். அப்படியிருக்கும் போது முதல் மற்றும் 2ஆவது போட்டிக்கு எப்படி 2 நாட்கள் இடைவெளி போதுமானதாக இருக்கும். ஆசிய கோப்பை அட்டவணையானது நியாயமான போட்டி மற்றும் வீரர்களுக்கு ஏற்ற வகையில் அட்டவணை இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.